india

img

தெலுங்கானா முதல்வர் - ஆளுநர் இடையே முற்றும் மோதல் :  பிரதமர் மோடி - ஆளுநர் தமிழிசை திடீர் சந்திப்பு...

தில்லி
தெலுங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் - அம்மாநில ஆளுநர் தமிழிசைக்கும் இடையே கடந்த சில மாதங்களாக மோதல் போக்கு ஏற்பட்டு வரும் நிலையில், கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி தெலுங்கான சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கியது.

ஆனால் ஆளுநர் உரை இல்லாமல் துவங்கியது. வழக்கமாக பட்ஜெட் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன்தான் தொடங்கும் என்பதால் இந்த விவகாரம் பெரும் சர்ச்சை விஷயமாக டிரெண்ட் ஆன நிலையில், இதுகுறித்து ஆலோசிக்க ஆளுநர் தமிழிசை இன்று பிரதமர் மோடியை சந்தித்தார்.

பிரதமர் மோடியை சந்திப்புக்கு பின்பு செய்தியாளர்களிடம் பேசிய ஆளுநர் தமிழிசை,"அரசியலமைப்புச் சட்டத்தின்படி ஆளுநர் பதவிக்கு மதிப்பளிக்க வேண்டும். தெலுங்கான அரசு தன்னை அவமதிப்பது குறித்து நான் எந்த வருத்தமும் அடையவில்லை, மாறாக, ஒரு மாநில அரசு, தன்னை எப்படி நடத்துகிறது என்பதை அந்த மாநில மக்களே அறிந்து கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறேன்" எனக் கூறினார்.

;