india

img

ஏ.ஆர் ரகுமானின் மூப்பில்லா தமிழே தாயே பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம்


ஏ.ஆர்.ரகுமான் இசையில் வெளியாகியுள்ள ஆல்பமான ’மூப்பில்லா தமிழே தாயே’ பாடல் யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடத்தை பிடித்துள்ளது.
புதிய கலைஞர்களை அறிமுகப்படுத்தும் நோக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் தொடங்கிய மாஜா தளத்தில் அடுத்தடுத்து பாடல்கள் வெளியாகி வருகிறது. அந்தவகையில், பாடலாசிரியர் தாமரை எழுதி ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து தயாரித்து வெளியிட்டுள்ள இசை ஆல்பமான 'மூப்பில்லா தமிழே தாயே' என்ற தமிழின் தொன்மையையும், பெருமையையும் பறைசாற்றும் விதமாக உருவாகியுள்ள பாடல், மார்ச் 24 ஆம் தேதியன்று துபாய் எக்ஸ்போவில் நடைபெற்ற ரகுமான் இசை நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து வெள்ளியன்று இந்த பாடல் மாஜாவின் யூடியூப் சேனலில் வெளியிடப்பட்டது.
இந்த பாடல் வெளியாகி இரண்டு நாள்கள் ஆன நிலையில், தற்போது யூடியூப் தளத்தின் டிரெண்டிங்கில் முதலிடத்தில் உள்ளது. இதனை ஏ.ஆர்.ரகுமான் சுட்டுரையில் பகிர்ந்து ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.