லக்னோ:
கொரோனா தொற்றின் 2-ஆவதுஅலை வடமாநிலங்களை ஆட்டிப்படைத்து வருகிறது. குறிப்பாக, பாஜகஆளும் உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கானோர் கொரோனா தொற்றால் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். இறந்தவர்களின் உடல்களால் இடுகாடுகள், தகன மேடைகள் நிரம்பி வழிகின்றன.
ஆனால், இந்த உண்மையை வெளியில் தெரியாமல் மறைக்க உ.பி., ம.பி., குஜராத் அரசுகள், தொடர்ந்து பொய்யான புள்ளிவிவரங்களை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில்தான், உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவிலுள்ள கோமதி ஆற்றங்கரையில் தகன மேடைகளில் குவியும் பிணங்கள் தொடர்பான வீடியோ, புகைப்படங்கள் ஊடகங்களில் வெளியாவதைத் தடுக்க, அந்தப் பகுதியையே தகர ஷீட்டுகளை அடித்து மறைக்கும் வேலையில் உத்தரப்பிரதேச பாஜக அரசு இறங்கியுள்ளது.லக்னோ மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், கொரோனாவாலும் இதர பிற காரணங்களாலும் இறப்போரின்உடல்கள், எரியூட்ட இடமின்றி வரிசையில் காக்க வைக்கப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. பத்திரிகையாளர் ஒருவர் இந்த சம்பவத்தை படம் பிடித்து தனது சமூக தளத்தில் பதிவிட்டதுடன், வீடியோ செய்தியாகவும் வெளியிட்டார்.பைகுந்த் தாம் இடுகாட்டின் அரசுக் கணக்குப்படி, கடந்த புதன்கிழமையன்று கொரோனாவால் 14 பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
ஆனால் அன்றைய தினம் மட்டும் 46 பேரை எரித்ததாக அங்கு பணியாற் றும் முன்னா என்ற ஊழியர் தெரிவித்திருந்தார். நான் 6 ஆண்டுகளாக இங்கு பணியாற்றி வருகிறேன். இதுவரை ஒரே நாளில் இத்தனை சடலங்கள் வந்ததில்லை என்று அவர் கூறியிருந்தார்.அதேபோல கடந்த ஒரு வாரத்தில்கொரோனாவால் 124 பேர் பலியாகியுள்ளனர் என்று கூறப்பட்டாலும், பைகுந்த் தாம் இடுகாடு மற்றும் குலாலா இடுகாட்டில் 400 உடல்கள் எரியூட்டப்பட்டன. இதில் 276 மரணங்கள்எப்படி நிகழ்ந்தது? என தனக்கு தெரியாது என்றும் முன்னா குறிப்பிட்டிருந்தார்.பைசாகுந்த் இடுகாட்டில் இறந்தோரின் உடல்கள் 24 மணிநேரமும் தொடர்ந்து எரிக்கப்படுவதால், கோமதி ஆற்றங்கரை எப்போதும் தீ ஜூவாலைகளாகவே காட்சியளிக் கிறது. மக்கள் வீட்டை விட்டு வெளியேவரமுடியாத அளவிற்கு அக்கம் பக்கத்தை புகை சூழ்ந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
இந்நிலையிலேயே, பைசாகுந்த் இடுகாட்டில் பிணங்கள் எரிக்கப்படும், புகைப்படங்கள், வீடியோக்கள்வெளியாகாமல் இருக்க, அந்தப்பகுதிகளை தகரத்தை வைத்து அடைக்கும் வேலையில் உத்தரப்பிரதேச பாஜக அரசு இறங்கியுள்ளது.