அலிகார்:
அலிகார் நகரின் பெயரை,ஹரிகர் என மாற்றுவது குறித்து உத்தரப்பிரதேச பாஜக அரசு ஆலோசனையில் இறங்கியுள்ளது.உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் தலைமையிலான உ.பி. பாஜக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதலாகவே, இஸ்லாமிய அடையாளங்களில் இருக்கும் ஊர்களின் பெயர்களை, இந்து அடையாளத்திற்கு மாற்றி வருகிறது.முகுல் சராய் ரயில் நிலையத்தின் பெயர் பண்டிட் தீனதயாள் உபாத்யாய் நகர் என்று மாற்றப்பட்டது. இதேபோல அலகாபாத் நகரத்தின்பெயர் ‘பிரயாக்ராஜ்’ எனவும், பைசாபாத் நகரின் பெயர்‘அயோத்யா’ எனவும் மாற் றப்பட்டது.இந்நிலையில்தான் அலிகாரில் நடைபெற்ற பஞ்சாயத்து வாரியக் கூட்டத்தில் அலிகார் நகரின் பெயரை‘ஹரிகர்’ என மாற்றுவதுதொடர்பாக ஏகமானதாகதீர்மானம் நிறைவேற்றப்பட் டுள்ளது.அதேபோல், தானிபூர் விமானதளத்தை கல்யாண் சிங் விமானத்தளம் எனப் பெயர்மாற்ற வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.