tamilnadu

img

வேலையின்மையை போக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்திடுக!

அரசுகளுக்கு வாலிபர் சங்கம் கோரிக்கை

சென்னை,நவ.29- வேலையின்மையை போக்க போர்க்கால அடிப்படையில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று  மத்திய, மாநில அரசுகளுக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து வாலிபர் சங்கத்தின் மாநிலத் தலைவர் என்.ரெஜீஸ்குமார், மாநி லச் செயலாளர் எஸ்.பாலா ஆகியோர் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கோயம்புத்தூர் மாநகராட்சி கிரேடு -1 சானிட்டரி பதவிகளுக்கான 549 பணி யிடங்களை நிரப்புவதற்கான விண்ணப் பங்களை கோரியிருந்தது. இதற்கான நேர்கா ணல் மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு கடந்த மூன்று நாட்களாக நடைபெற்றது. இதில் 7 ஆயிரம்  பேர் பங்கேற்றுள்ளனர். இதில் பெரும்பாலானவர்கள் பொறியா ளர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்ட தாரிகள் மற்றும் டிப்ளமோ பயின்றவர்கள் ஆவர். இளைஞர்கள்  தனது கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலை கிடைக்காத காரணத்தாலும், தனியார் நிறுவனங்களில் சம்பளம் மிகவும் குறைவாக இருப்பதாலும், பணிப்பாது காப்பு இல்லாததாலும் இப்பணிக்கு விண் ணப்பித்துள்ளனர்.

இது வேலையில்லாத் திண்டாட்டத்தின் அவலத்தை அம்பலப்படுத்துகிறது. கல்வித்தகுதி அதிகமுள்ள பொறியாளர்கள், இளங்கலை மற்றும் முதுகலை பட்டதாரி கள் இப்பணியில் சேர்வதன் மூலம் அவர்கள் இத்தனை ஆண்டுகாலம் கடுமையாக உழைத்துப் பெற்ற கல்வியறிவு வீணடிக் கப்படுகிறது. மேலும் குறைவான கல்வித் தகுதியுடைய மற்றும் கல்வி பெற வாய்ப்பில் லாதவர்களின் வேலைவாய்ப்புகளும் பறிக்கப்படுகிறது.  சில மாதங்களுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றத்தில் துப்புரவு பணிக்கான விண்ணப்பங்களை கோரியபோதும், தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் சானிட்டரி பணிக்கான விண்ணப்பங்களை கோரியபோதும் அப்பணியிடங்களுக்கு முனைவர் பட்டம் பெற்றவர்கள் உள்ளிட்டு உயர்தகுதி படைத்த இளைஞர்கள் விண் ணப்பித்தபோது அது குறித்து பரபரப்பாக பேசப்பட்டது. இப்போதும் கோவை மாநக ராட்சியில் சானிட்டரி பணியிடங்களுக்கு உயர்கல்வி பயின்ற இளைஞர்கள் விண் ணப்பித்துள்ளது பரபரப்பாக பேசப்படு கிறது. இதனை வெறும் பரபரப்புச் செய்தி யாக மட்டும் கருதி கடந்துவிட முடியாது, கடந்துவிடக் கூடாது. இது இளைஞர் சமூகம் சந்திக்கும் மிக முக்கியமான பிரச்சனை. 

மத்திய, மாநில அரசுகள் கடைப்பிடிக்கும் நவீன தாராளமயக் கொள்கைகளின் விளை வாகத்தான் வேலையின்மை இந்த அளவு க்கு உயர்ந்துள்ளது. வேலையின்மையை போக்குவதற்கு போர்க்கால அடிப்படை யில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டிய கட்டத்தில் நாம் நின்று கொண்டிருக்கிறோம். இதில் அலட்சியம் செய்தால் மேலும் பல நெருக்கடியான நிலைமைகளை தமிழகம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆட்சியாளர்கள் வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடிய திட்டங்களை முன்னு ரிமை அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். கார்ப்பரேட்டுகளுக்கு வரிச் சலுகை வழங்குவதை கைவிட்டு உள் கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான பணி களை கண்டறிந்து செயல்படுத்த வேண்டும். புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்கு வதற்கான கால நிர்ணயத்துடன் கூடிய புதிய திட்டங்களை செயலாக்க முன்வர வேண்டும். வேலைவாய்ப்பை உருவாக்கா மல் மக்களின் வாங்கும் சக்தியை அதிகரிக்க முடியாது. வாங்கும் சக்தியை அதிகரிப்ப தன் மூலம்தான் சந்தை வளர்ச்சி பெறும். அதற்கு அடிப்படையான வேலைவாய்ப்பை உருவாக்குவது அரசின் பொறுப்பாகும். 

எனவே வேலையில்லாத் திண்டாட்டத்தின் ஆபத்தை உணர்ந்து, படித்த மற்றும் படிக்காத இளைஞர்களு க்கு வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தும் வகையில் அரசு காலிப்பணியிடங்களை முழு மையாக நிரப்புவதுடன் புதிய வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான நட வடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.  மேலும், வேலையில்லாத, வேலை யிழப்புக்கு ஆளான, தகுதிக்கான வேலை யில்லாத அனைத்து இளைஞர்களும் ஒன்றுபட்டு வேலையின்மைக்கு எதிரான போராட்டத்தை நடத்திட அணிசேர வேண்டுமென இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வேண்டுகோள் விடுக்கிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.