லக்னோ:
உத்தரப் பிரதேசத்தில் 2022-ஆம்ஆண்டு துவக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், ஆதித்யநாத் தலைமையிலான பாஜகஅரசு இப்போதே அதற்கான வேலைகளைத் துவங்கி விட்டது. ஐந்தாண்டுசாதனைகள் என்று விளம்பரங்களையும் வெளியிட ஆரம்பித்துள்ளது.
அந்த வகையில் “முதல்வர் யோகிஆதித்யநாத் தலைமையில் உத்தரப் பிரதேசம் அடையும் மாற்றம்” (Transforming Uttar Pradesh underYogi Adityanath)’ என்ற தலைப்பில்ஆங்கில நாளிதழ் ஒன்றில் வெளியிடப்பட்ட முழுப்பக்க விளம்பரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.அதாவது, மேற்குவங்க மாநிலத் தில் சால்ட் லேக் , ராஜர்ஹட் பகுதியை இணைக்கும் வகையில் கட்டப் பட்டுள்ள ‘மா மேம்பாலத்தின்’ புகைப்படத்தைக் போட்டு, அதனை உத்தரப்பிரதேசத்தில் ஆதித்யநாத் அரசு கட்டிய பாலமாக காட்டி மோசடி செய்திருப்பது தெரியவந்துள்ளது.உ.பி. அரசின் விளம்பரத்தில் இடம்பெற்றுள்ள அந்தப் பாலத்தில், மேற்குவங்கத்தில் இயங்கும் மஞ்சள் டாக்ஸிகள் ஓடுவதும், அந்த மேம்பாலத்தின் அருகே கொல்கத்தாவிலுள்ள புகழ்பெற்ற ஐந்து நட்சத்திர ஹோட்டல் களின் புகைப்படங்களும் தெளிவாகத்தெரிகின்றன.இதற்கு உத்தரப்பிரதேச மாநில எதிர்க்கட்சிகளும், மேற்குவங்கத்தின் ஆளும் திரிணாமுல் காங்கிரசும் கடும்கண்டனம் தெரிவித்துள்ளன.“முதல்வர் ஆதித்யநாத்தின் பொய் மீண்டும் அம்பலமாகியுள்ளது. விளம்பரத்தில் காட்டும் எந்த பணிகளுமே உ.பி.யில் நடைபெறவில்லை. பொய் கூறுவதில் பாஜக அரசு முதலிடத்தில் உள்ளது” என்று சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் விமர்சித் துள்ளார்.
“மேற்குவங்கத்தில் கட்டிய பாலங் களின் படங்களைத் திருடி தனது சாதனையாக கூறி கொள்வதுதான்.. உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள மாற்றம்போலிருக்கிறது...” என்று திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி சாடியுள்ளார்.
“பொய்யான விளம்பரங்களைக் கொடுப்பதே அவர்களின் (பாஜகவினரின்) வேலை. போலி கணக்காளரை உருவாக்கி, இப்போது மேம்பாலம் மற்றும் தொழிற்சாலைகளின் போலிப் படங்களையும் வெளியிட்டுள்ளனர்” என்று காங்கிரஸ் தலைவர் பிரியங்காகாந்தி விமர்சித்துள்ளார்.இதனிடையே, இந்த விளம்பரம் தங்களின் செய்தித்தாள் மூலமே வடிவமைக்கப்பட்டதாகவும், எதிர்பாராதவிதமாக இந்த பிழை ஏற்பட்டுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட செய்தித்தாள் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இந்த விளம்பரங்களை அனைத்து டிஜிட்டல் தளங்களில் இருந்தும் நீக்கி விட்டோம் எனவும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.அதேநேரம், “விளம்பரத்தில் தவறே இருந்தாலும் இதுதொடர்பாக நீதிமன்றத்தைத்தான் நாட வேண்டுமே தவிர, சமூக வலைதளத்தில் கூச்சல் போடக்கூடாது! என்று மேற்கு வங்கபாஜக வெட்கமே இல்லாமல் கொக்கரித்துள்ளது.