லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் டாக்டர் கபீல் கான். கோரக் பூர் மருத்துவமனையில் கடந்த 2017-ஆம் ஆண்டு ஆக்சிஜன் கிடைக்காமல் 63 குழந்தைகள் இறந்தபோது, தனது சொந்த செலவில் ஆக்சிஜன் வாங்கி, பல உயிர்களைக் காப்பாற்றியவர்.
ஆனால், உத்தரப்பிரதேச பாஜகஅரசு டாக்டர் கபீல் கானையே, குழந்தைகள் இறப்புக்கு பொறுப்பாக்கி சிறையில்அடைத்தது. பின்னாளில் டாக்டர் கபீல்கான் குற்றமற்றவர் என்று கூறி, நீதிமன்றம் அவரை விடுதலை செய்தது.எனினும் மாநில பாஜக அவருக்குமீண்டும் மருத்துவர் பணி வழங்கவில்லை. அவருடன் சேர்த்து சஸ் பெண்ட் செய்யப்பட்ட ஏனைய 2 டாக் டர்களை மட்டும் அங்குள்ள பாஜக அரசு மீண்டும் வேலையில் சேர்த்துக் கொண்டது.
இந்நிலையில், “கடந்த ஒரே ஆண்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இறந்து விட்ட நிலையிலும், நாடுதற்போது எதிர்கொண்டு வரும் கடுமையான கொரோனா பேரிடரைக் கருத்தில்கொண்டும், மக்களுக்கு நான் மருத்துவச் சேவையாற்ற விரும்புகிறேன், அதற்கு என்னை அனுமதிக்க வேண்டும்” என்று டாக்டர் கபீல் கான் மாநில அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.“என்னை மறுபடியும் பணியில் சேர்த்து கொள்ள வேண்டும், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்க வாய்ப்பு தர வேண்டும். காரணம், எனக்கு ஐசியூ சிகிச்சைப் பிரிவில் 15 ஆண்டு அனுபவம் உள்ளது. அந்தஅனுபவத்தை வைத்து பல உயிர்களைஎன்னால் காப்பாற்ற முடியும். கொரோனா சரியான பிறகு வேண்டுமானால், திரும்பவும் என்னை சஸ்பெண்ட்செய்துவிடுங்கள்” என்றும் முதல்வர்ஆதித்யநாத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் உருக்கமாக குறிப்பிட்டுள்ளார்.