india

img

பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சின்மயானந்தா விடுதலை... குற்றச்சாட்டை நிரூபிக்காத உ.பி. பாஜக அரசு...

லக்னோ:
உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் சாமியார் சின்மயானந்தா (75),முன்னாள் பிரதமர் வாஜ் பாய் அமைச்சரவையில் மத் திய இணையமைச்சராக பதவி வகித்தவர். தற்போதுஷாஜகான்பூரில் சட்டக்கல் லூரி நடத்தி வருகிறார்.இவர், தனது கல்லூரியில் பயின்று வரும் 23 வயதுமாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த வழக்கு லக்னோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், தன்னை மிரட்டி பணம் பறிக்கும் நோக்கிலேயே வழக்கு தொடரப்பட்டதாக சாமியார் சின்மயானந்தா கூறினார். இதுதொடர்பாக அவரும் ஒரு புகாரை மாணவி மீது அளித்தார். 

உ.பி. பாஜக அரசின் காவல்துறையும், உடனடியாக மாணவியை கைதுசெய்து சிறையில் அடைத் தது.தற்போது இவ்வழக்கில்இருதரப்பு வாதங்களும்முடிந்த நிலையில், ‘‘பாலியல் குற்றச்சாட்டுகளுக்கு வலுசேர்க்கும் ஆதாரங் களை உ.பி. காவல்துறை சமர்ப்பிக்கவில்லை. மாணவி உள்ளிட்டோர் மீதான குற்றச்சாட்டுக்கும் ஆதாரங்கள் இல்லை. ஆதலால், அனைவருமே விடுவிக்கப்படுகின்றனர் என்று சிறப்பு நீதிமன்ற நீதிபதி பி.கே. ராய் தீர்ப்பளித் துள்ளார்.