india

img

கொரோனா பெருந்துயரை வேடிக்கை பார்க்கிறது பாஜக அரசு.... உ.பி.முன்னாள் முதல்வர் அகிலேஷ் கடும் தாக்கு....

லக்னோ:
உத்தரப்பிரதேசத்தில் நிகழும் கொரோனா பெருந்துயரை பாஜகவின் யோகி அரசு மவுனமாக வேடிக்கை பார்ப்பதாக முன்னாள் முதல்வர் அகிலேஷ் குற்றச்சாட்டியுள்ளார்.

கொரோனா பெருந்தொற்றால் உத்தரப் பிரதேச மாநிலம் மிக மோசகமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. ஆக்சிஜன் மற்றும் படுக்கை வசதி கிடைக்காமல் மக்கள் வீதிகளில் அலைந்து கொண்டிருக்கின்றனர்.உத்தரப்பிரதேசத்தில் முதல்வர்யோகி ஆதித்யநாத் தலைமை யிலான பாஜக அரசு உள்ளது.கொரோனாவால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவ தால், சடலங்களை எரிப்பதற்கான இடம்கிடைக்காமல், கங்கை நதியில் வீசுவதாகவும் குற்றச்சாட்டும் எழுந்துள் ளது.இதுகுறித்து  சமாஜ்வாதி கட்சி தலைவரும் முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலையும், உயிரிழப்பை பற்றி கண்டு கொள்ளாமலும், சேதத்தை அறியாமலும் பா.ஜ.க அரசு மவுனமாக வேடிக்கை பார்க்கிறது. உத்தரப்பிரதேச மாநிலங்களில் உள்ள கிராமங்களில் கொரோனா உயிரிழப்பு நாளுக்கு அதிகரித்து வருகிறது. ஆனால், தொற்றைத் தடுப்பதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சர்களைக் காணவில்லை. மாநிலத்தில் கொரோனா வைரஸை கட்டுப்படுத்திவிட்டோம் என்று முதல்வர் ஆதித்யநாத் பொய் கூறி வருகிறார்.

யோகியின் மாவட்டத்தில்46 ஆயிரம் பேர் பாதிப்பு

ஆதித்யநாத்தின் சொந்த மாவட்டமான கோரக்பூரில் 46 ஆயிரம் பேர் தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். மேலும் காய்ச்சல், இருமலுடன் அலைகிறார்கள். ஆனால், மாவட்ட நிர்வாகமோ 764 பேர் தான்பாதிக்கப்பட்டார்கள் எனக்கூறுகிறது.கிராமங்களில் வேகமாக கொரோனா தொற்று பரவி வரும் நிலையில், அதைச் சமாளிக்க போதுமான மருந்துகள், பரிசோதனை வசதிகள், தடுப்பூசிகளை மக்களுக்காக ஏற்பாடு செய்யாமல், அங்கு நடக்கும் பெருந்துயரை மவுனமாக பா.ஜ.க அரசு வேடிக்கை பார்க்கிறது என்று சாடியுள்ளார்.