லக்னோ:
பாஜக ஆளும் உத்தரப் பிரதேச மாநிலத்தில், 14 அரசு மருத்துவர்கள் ஒரேநேரத்தில் தங்களின் பதவியை ராஜினாமா செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளனர்.உ.பி. மாநிலம் உன்னாவ் மாவட்டத்திலுள்ள ஆரம்ப சுகாதார மையம் மற்றும் சமூக சுகாதார மையங்களில் பணியாற்றி வந்த இந்த 14 மருத்துவர்களும், அரசுக்கு அனுப்பியுள்ள தங்களின் ராஜினாமா கடிதங்களில் கூறியிருப்பதாவது:
‘இந்த கொரோனா பெருந்தொற்று காலத்தில் அதிகப்படியான வேலைப்பளுவில் இருந்து வருபவர்கள் முன்களப் பணியாளர் களான மருத்துவர்களும் செவிலியர்களும்தான். ஆனால், இப்படியான வேலைப்பளுவுக்கு மத்தியிலும் அரசின் உயர் நிர்வாக அதிகாரிகள் சர்வாதிகார அணுகுமுறையை கடைப்பிடித்து தண்டனை உத்தரவுகளை பிறப்பித்து வந்தனர். அநாகரிகமாக நடந்து கொண்டனர்.
24 மணி நேரமும் சுழற்சி முறையில் வேலை செய்தாலும், வேலை செய்யவில்லை என அவமானப்படுத்துகின்றனர். எனவே, எங்களின் வேலையை ராஜினாமா செய்கிறோம்’ என்று கூறியுள்ள னர்.இந்த செய்தி உ.பி. மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உன்னாவ் மாவட்ட ஆட்சியர் அவசர அவசரமாக பேச்சுவார்த்தை நடத்தி மருத்துவர்களை சமாதானப்படு த்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.