india

img

ராஜஸ்தானில் இரண்டாம் கட்ட தேர்தலிலும் அடி வாங்கியது பாஜக.... 57 இடங்கள் அதிகம் பெற்று காங்கிரஸ் முந்தியது....

ராஜஸ்தான்:
ராஜஸ்தான் மாநிலத்தில் 12 மாவட்டங்களுக்கு உட் பட்ட 50 நகராட்சிகளுக்கு கடந்த 2020 டிசம்பரில் தேர் தல் நடைபெற்றது.

இதில், காங்கிரஸ் 36 நகராட்சிகளைக் கைப்பற்றிய நிலையில், பாஜக-வுக்கு வெறும்12 நகராட்சிகள் மட்டுமே கிடைத்தன. குறிப்பாக, மாநிலத் தலைநகர் அமைந்திருக்கும் ஜெய்ப்பூர்மாவட்டத்தின் 10 நகராட்சிகளிலும் பாஜக தோற்றுப் போனதுஇதனிடையே, ராஜஸ்தானில் இரண்டாம் கட்டமாக- 20 மாவட்டங்களில் 90 நகராட்சி அமைப்புகளுக்கு நடந்த தேர்தலிலும் பாஜகவை காங்கிரஸ் முந்தியுள்ளது.அஜ்மீர், பன்ஸ்வாரா, பிகானேர், பில்வாரா, பூண்டி,பிரதாப்கர், சிட்டோர்கர், சுரு,துங்கர்பூர், ஹனுமன்கர், ஜெய்சால்மர், ஜலூர், ஜலவர், ஜுன்ஜுன், நாகவுர்,ராஜூர் ஆகிய மாவட்டங்களில் மொத்தமிருக்கும் 3 ஆயிரத்து 34 வார்டுகளில், பாஜக ஆயிரத்து 140 வார்டுகளைப் பெற்ற நிலையில், காங்கிரஸ் 57 இடங்கள் கூடுதலாக ஆயிரத்து 197 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

சுயேச்சைகள் 634 வார்டுகளை பெற்றுள்ளனர். தேசியவாத காங்கிரஸ் 46 வார்டுகளையும், ஆர்எல்பி கட்சி13 வார்டுகளையும் கைப்பற்றியுள்ளனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3 வார்டுகளையும், பகுஜன் சமாஜ் கட்சி 1 வார்டையும் வென்றுள்ளன. முதற்கட்டத் தேர்தலைப் போல ஆகிவிடக் கூடாது என்பதற்காக, இரண்டாம் கட்டத்தில் பாஜக பெருமளவு பணத்தை வாரி இறைத்தது. அப்படியிருந்தும் பாஜக தோல்வி அடைந்துள்ளது. காங்கிரஸ் 34.36 சதவிகித வாக்குகளையும், பாஜக 33.49 சதவிகித வாக்குகளையும் பெற்றுள்ள நிலையில், சுயேச்சைகள் 29.23 சதவிகித வாக்குகளைப் பிரித்துள்ளனர். தேசியவாத காங்கிரஸ் 1.26 சதவிகிதவாக்குகளை வாங்கியுள்ளது.