பழைய ஸ்மார்ட் போன்களில் வரும் நவம்பர் 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயலி இயங்காது என வாட்ஸ் ஆப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கோடிக்கணக்கானோர் வாட்ஸ் ஆப் செயலியை தகவல் பரிமாற்றத்திற்காக பயன்படுத்தி வருகின்றனர். இந்த வாட்ஸ் ஆப் செயலியை பேஸ்புக் நிறுவனம் தன்வசம் வைத்துள்ளது.
இந்நிலையில் பழைய ஸ்மார்ட் போன்களில் வரும் நவம்பர் மாதம் 1 ஆம் தேதி முதல் வாட்ஸ் ஆப் செயலி செயல்படாது என அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதில் ஆண்ட்ராய்டு ஓ.எஸ்., 4.1 மற்றும் அதற்கு மேல், ஐ,ஓ,எஸ்., 10 மற்றும் அதற்கு மேல் உள்ள ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ் ஆப் செயலி செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் லேட்டஸ்ட் வெர்ஷன்களை ஆதரிக்கும் ஸ்மார்ட் போன்களில் மட்டுமே வாட்ஸ்ஆப் செயலியை பயன்படுத்த முடியும் என வாட்ஸ்ஆப் நிறுவனம் அறிவித்துள்ளது.