india

img

ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கம்!

புதுதில்லி,மார்ச்.11- ஒன்றிய அமைச்சரின் பேச்சு அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளது தற்போது பேசுபொருளாகியுள்ளது.
நேற்று நடைபெற்ற நாடாளுமன்ற கூட்டத்தொடரில் தமிழ்நாடு நாடாளுமன்ற உறுப்பினர்களை அவமதிக்கும் வகையில் பேசிய ஒன்றிய அமைச்சர் தர்மேந்திர பிரதானின் பேச்சு நாடாளுமன்ற அவைக் குறிப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.
இவரது பேச்சுக்கு எதிர்க்கட்சி தலைவர்கள்  கடும் கண்டனங்கள் தெரிவித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் நேற்று தர்மேந்திர பிரதானின் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடைபெற்றது.