india

img

காற்று மாசுபாடு: 5 ஆவது இடத்தில் இந்தியா!

2024-இல் உலகின் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது என்று ஐகியூஏர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது.

ஐகியூஏர் நிறுவனம், 138 நாடுகளில் உள்ள 40,000 காற்று தர கண்காணிப்பு நிலையங்களிலிருந்து பகுப்பாய்வு செய்தது. இது குறித்த அறிக்கையின் படி, 2024-இல் உலகின் காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா 5ஆவது இடத்தில் உள்ளது.

காற்று மாசுபாடு அதிகம் உள்ள நாடுகளில் சாட் முதலிடத்திலும், வங்க தேசம் 2ஆவது இடத்திலும், பாகிஸ்தான் 3ஆவது இடத்திலும், காங்கோ 4ஆவது இடத்திலும் உள்ளது.

அதேபோல், உலகளவில் மிகவும் மாசுபட்ட தலைநகராக தில்லி தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. தில்லியில், ஆண்டு சராசரி PM2.5 செறிவு ஒரு கன மீட்டருக்கு 91.6 மைக்ரோகிராம் ஆகும். அசாமில் உள்ள பைர்னிஹாட், உலகின் மிகவும் மாசுபட்ட நகரமாக உள்ளது.