india

img

2026–27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கை - முக்கிய அறிவிப்புகள்

2026–27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்தார்.

நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர்,  குடியரசுத் தலைவர் உரையுடன் ஜனவரி 28 அன்று துவங்கியது. ஜனவரி 29 அன்று 2026–27  நிதியாண்டிற்கான பொருளாதார ஆய்வறிக்கையை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து, பிப்ரவரி 1 அன்று 2026–27 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிர்மலா சீதாராமன் இன்று  தாக்கல் செய்தார். இது நிர்மலா சீதாராமனின் தொடர்ச்சியான 9-ஆவது பட்ஜெட் தாக்கல் ஆகும். 
பட்ஜெட் 2026 - முக்கிய அறிவிப்புகள்:

  • உயிரி மருத்துவ (Bio Pharma) திட்டங்களை ஊக்குவிக்க ரூ.10,000 கோடி ஒதுக்கீடு!
  • செமி கண்டக்டர் துறையை ஊக்குவிக்க ரூ.40,000 கோடி ஒதுக்கீடு.
  • காதி, கைத்தறி, கைவினைப் பொருட்களை வலுப்படுத்த 'மகாத்மா காந்தி கிராம் ஸ்வராஜ் என்ற புதிய திட்டம் தொடங்கப்படும். 
  • சிறு, குறு தொழில்களுக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு.
  • தமிழகம், கேரளம், ஒடிசாவில் அரிய வகை கனிமங்களை ஆய்வு செய்ய மையம் அமைக்கப்படும்.
  • நகர்ப்புற மேம்பாட்டுத் திட்டங்களுக்கு ரூ.5,000 கோடி நிதி ஒதுக்கீடு.
  • பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் பெண்களுக்கான விடுதிகள் அமைக்கப்படும்.
  • தூத்துக்குடி மாவட்டத்தில் அமைந்துள்ள ஆதிச்சநல்லூர் தொல்லியல் தளம், உலகத்தரம் வாய்ந்த சுற்றுலாத் தலமாக மேம்படுத்தப்படும்.
  • பொதிகை மலையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த மலையேற்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும்.
  • பழவேற்காடு ஏரியில் பறவை கண்காணிப்பு மையம் அமைக்கப்படும்.
  • நாடு முழுவதும் 15 தொல்லியல் தளங்கள் சுற்றுலாத் தளமாக மேம்படுத்தப்படும்.
  • நிதிக்குழு பரிந்துரையின்படி மாநிலங்களுக்கு ரூ.1.4 லட்சம் கோடி நிதி வழங்கப்படும்.
  • புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1ஆம் தேதி அமலுக்கு வரும்.
  • தனி நபர் வருமான வரி விதிப்பில் எந்த மாற்றமும் இல்லை.

ரூ.4 லட்சம் வரை  - 0%
ரூ.4 - ரூ.8 லட்சம் வரை - 5%
ரூ.8 - ரூ.12 லட்சம் வரை - 10%
ரூ.12 - 16 லட்சம் வரை - 15%
ரூ.16 - ரூ.20 லட்சம் வரை - 20%
ரூ.20 - ரூ.24 லட்சம் வரை - 25%
ரூ. 24 லட்சத்திற்கு மேல் - 30%

  • வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய அவகாசம் மார்ச் 31ஆம் தேதி வரை நீட்டிக்கப்படும்.
  • வருமான வரிக் கணக்கில் திருத்தம் செய்து தாக்கல் செய்ய டிசம்பரில் இருந்து மார்ச் 31 வரை கால அவகாசம் நீட்டிக்கப்படும்.
  • வருமான வரி கணக்கு தாக்கலின் போது வருமானத்தை மறைத்தால் இனி 100% அபராதம்.
  • விபத்துக் காப்பீடு மூலம் கிடைக்கும் தொகைக்கு வருமான வரி விலக்கு
  • மருத்துவம், கல்விச் செலவுக்கான வரி பிடித்தம் 5%இல் இருந்து 2%ஆக குறைக்கப்படும்.
  • வரும் 2026 - 27ஆம் நிதியாண்டில் ஒன்றிய அரசு ரூ.17.2 லட்சம் கோடி கடன் வாங்க முடிவு.
  • சர்க்கரை நோய், புற்றுநோய் மருந்துகளின் விலை குறையும்.
  • புற்றுநோய் தொடர்பான 17 வகையான மருந்துகளுக்கு சிறப்பு சலுகை.
  • அரிய நோய்களுக்கான 7 மருந்துகள் இறக்குமதிக்கு வரிவிலக்கு.
  • மின்சார வாகனங்களை ஊக்குவிக் லித்தியம் பேட்டரிகளுக்கு இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு.