திரிணாமுல் எம்.பி மஹுவா மொய்த்ரா பதவி இன்று பறிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, நாடாளுமன்றத்தில் அதானிக்கு எதிராகக் கேள்வியெழுப்ப பிரபல தொழிலதிபர் ஹிராநந்தனியிடம் பணம், பரிசுப்பொருள்கள் வாங்கியதாகவும், தன்னுடைய நாடாளுமன்ற இணையதள ஐ.டி மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்ததாகவும், பா.ஜ.க எம்.பி நிஷிகாந்த் துபே குற்றம்சாட்டியிருந்தார். இந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் மஹுவா மொய்த்ராவின் எம்.பி பதவி இன்று பறிக்கப்பட்டுள்ளது. மக்களவையில் இதுதொடர்பாக மஹுவா மொய்த்ரா தனது தரப்பை விளக்கமளிக்க வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்றும், மஹுவா மொய்த்ரா மீதான இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் எம்.பி-க்கள், அவையிலிருந்து வெளிநடப்பு செய்து நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர்.