india

img

‘வரலாற்று காங்கிரஸில் நெறிமுறை மீறப்படவில்லை’

கண்ணூர்:
கேரள ஆளுநர் பங்கேற்ற வரலாற்று காங்கிரசில் நெறிமுறை மீறப்பட்டதாக கூறப்படுவது தவறு என அந்த அமைப்புக்குழு அறிவித்துள்ளது.சிறப்பு காவல் படையின் (ஸ்பெசல் பிராஞ்ச்) அறிவுறுத்தலின்படி ஆளுநர் பங்கேற்கும் நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. நிமிடத்துக்கு நிமிட நிகழ்ச்சி நிரல்களும், மற்ற விவரங்களும் ஆளுநர் அலுவலகத்திலிருந்து அளிக்கப்பட்ட உத்தரவுகளுக்கு ஏற்ப மாற்றங்கள் செய்து இறுதி வடிவம் தரப்பட்டது. நிகழ்ச்சியின் முந்தைய ஏற்பாட்டின்படி துறைமுகம் மற்றும் தொல்பொருள் துறை அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி இந்திய வரலாற்று காங்கிரஸின் தீர்மானங்களை வெளியிடுவார் என அமைப்புக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், ஆளுநரின் அலுவலகம் அனுமதி அளிக்காததால் அந்த நிகழ்ச்சி ஒத்தி வைக்கப்பட்டது. இந்திய வரலாற்று காங்கிரசின் முந்தைய வழக்கத்தின்படி தற்போதைய தலைவர்தான் நிகழ்ச்சிக்கு தலைமை வகிப்பார். இதற்கான அனுமதி ஆளுநர் மாளிகையிலிருந்து பெறப்பட்டது.   

இதன்படி இந்திய வரலாற்று காங்கிரசின் நிகழ்கால தலைவர் அமியா குமார் பக் ஷி தலைவராகவும், அமைச்சர் ராமச்சந்திரன் கடனப்பள்ளி சிறப்பு பேச்சாளராகவும் நிகழ்ச்சி நிரல் தயாரிக்கப்பட்டது. 1935 இல் நிறுவப்பட்ட வரலாற்று காங்கிரஸின் முன் வழக்கப்படி தொடக்க நிகழ்ச்சியை நிர்வாக குழு தீர்மானிக்கும். இம்முறை ஆளுநர் அலுவலகத்தின் உத்தரவின்படி நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் செய்து இறுதிப்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் சிறிய மாற்றங்கள்கூட ஆளுநரின் அலுவலகத்துக்கு தெரிவித்து அங்கீகாரம் பெறப்பட்டது. இந்தி சூழ்நிலையில் ஆளுநர் பங்கேற்ற நிகழ்ச்சியில் நெறிமுறை மீறப்பட்டதாகவும், விழா அமைப்பு தவறு செய்து விட்டதாகவும் கூறுவது அடிப்படையற்றது என தெரிவிக்கப்பட்டுள்ளது.