india

img

தெலுங்கானா எம்எல்ஏவின் இந்திய குடியுரிமை ரத்து

புதுதில்லி, நவ.21- தெலங்கானா எம்.எல்.ஏ ரமேஷ் சென்னமனேணி என்பவ ரின் இந்தியக் குடியுரிமையை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.  தெலங்கானா ராஷ்டிரிய சமிதி யைச் சேர்ந்த  சட்டமன்ற உறுப்பி னர் ரமேஷ் சென்னமனேணி  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்தவர். கடந்த 2007 ஆம் ஆண்டு இவர், இந்தியக் குடியுரிமையை பெற்றார். ஆனால், போதிய விபரங்கள் மற்றும் ஆவணங்கள் அளிக்காமல் முறைகேடாக குடி யுரிமை பெற்றுள்ளது அரசுக்கு பின்னரே தெரிய வந்தது. அவ ரது உண்மையான ஆவணங் கள் வெளிநாட்டில் மறைத்து வைக் கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதையடுத்து உண்மை யான ஆவணங்களை மறைத்து மோசடி செய்து குடியுரிமை பெற்ற தாக அவர் மீது குற்றம்சாட்டப் பட்டது. இது தொடர்பான வழக்கில் தெலங்கானா நீதிமன் றம் சட்டமன்ற உறுப்பினருக்கு சாதகமாகவே தீர்ப்பளித்தது. ஆனாலும் குடியுரிமை கேட்டு விண்ணப்பிப்பதற்கு ஒரு வரு டத்திற்கு முன்னதாக அவர் இந்தி யாவில் வசிக்கவில்லை என்ப தாலும், பொதுநலன் கருதியும் அவரது குடியுரிமை ரத்து செய்யப் பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் விளக் கம் தெரிவித்துள்ளது. இந்தியக் குடியுரிமை ரத்து செய்யப் பட்டதால்  எம்எல்ஏ பதவியை இழக்கிறார்.