india

img

இந்தியாவில் இதுவரை 320 செல்போன் செயலிகளுக்கு தடை: மக்களவையில் ஒன்றிய அரசு தகவல்  

நாட்டின் பாதுகாப்பு கருதி இதுவரை 320 செல்போன் செயலிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக மக்களவையில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.  

இதுதொடர்பாக மக்களவையில் புதன்கிழமை எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றிற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணையமைச்சர் சோம் பிரகாஷ் அளித்த பதிலில் கூறியிருப்பதாவது, இந்தியாவில் தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் கீழ், பயனாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பான, நம்பகமான மற்றும் பொறுப்பான இணையம் கிடைப்பதை உறுதி செய்யவே இதுவரை 320 செயலிகள் தடை செய்யப்பட்டதாக கூறினார்.

மேலும் இந்தியாவின் இறையாண்மை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு, அரசு மற்றும் பொது ஒழுக்கத்தின் பாதுகாப்பு போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படுத்தியதால், 200 ஆம் ஆண்டு தகவல் தொழில்நுட்பச் சட்டப்பிரிவு 69ஏ-ன் கீழ் இதுவரை 320 செயலிகளை ஒன்றிய அரசு முடக்கியுள்ளதாக தெரிவித்தார்.

 முன்னதாக முடக்கப்பட்ட செயலிகள் மறுபெயரில் மீண்டும் பயன்பாட்டுக்கு வந்திருப்பது கண்டறியப்பட்டு அவையும் முடக்கப்படுகின்றன. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதத்தில் 49 கைப்பேசி செயலிகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார்.