மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீத்தாராம் யெச்சூரி புதுதில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவர் கடுமையான நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை நல்ல பலனை தந்துள்ளது. தோழர் சீத்தாராம் யெச்சூரி நலமாக உள்ளார் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக்குழு அலு வலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரி விக்கப்பட்டுள்ளது.