india

img

ப.சிதம்பரம் ஜாமீன் மனு மீது இன்று விசாரணை

ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு


புதுதில்லி,செப்.24- ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணையை புதனன்று பிற்பகலுக்கு தில்லி உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. ஐ.என்.எக்ஸ். மீடியா முறைகேடு வழக்கில் ப.சிதம்பரத்துக்கு சி.பி.ஐ. காவல் முடிவடைந்ததை தொடர்ந்து, நீதிமன்ற காவலில் அவர் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது நீதிமன்ற காவல் அக்டோபர் 3 ஆம்  தேதி வரை நீட்டிக்கப் பட்டுள்ளது. இந்தநிலையில் தன்னை ஜாமீனில் விடு விக்க கோரி ப.சிதம்பரம் தில்லி உயர்நீதி மன்றத்தில் கடந்த 11 ஆம் தேதி மனு தாக்கல் செய்தார். இதைத்தொடர்ந்து, அவருக்கு ஜாமீன் வழங்க எதிர்ப்பு தெரிவித்து சி.பி.ஐ. தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.  இந்தநிலையில், ப.சிதம்பரம் தரப்பில் தில்லி உயர்நீதிமன்றத்தில் திங்களன்று  பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை செவ்வாயன்று பிற்பகல்  நீதிபதி சுரேஷ் குமார் கைத் முன்னிலையில் நடைபெற்றது. ப.சிதம்பரம் தரப்பு வழக்கறிஞர் கபில் சிபல் வாதாடினார். ப.சிதம்பரம் தரப்பு தகவல்கள் குறித்து பிரமாணப் பத்திரம்  தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்று  சிபிஐ வாதிட்டது. இதனைதொடர்ந்து ப.சிதம் பரத்தின் ஜாமீன் மனு மீதான விசாரணை யை புதனன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.