ஜனாதிபதி வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சல்வா ஜூடும் வழக்கின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, துணை ஜனாதிபதி வேட்பாளரான ஓய்வுபெற்ற நீதிபதி சுதர்சன் ரெட்டியை நக்சல் ஆதரவாளர் என விமர்சித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை கண்டித்து உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், அபய் ஓகா, கோபால கவுடா, விக்ரம்ஜித் சென், குரியன் ஜோசப், மதன் லோகூர் மற்றும் ஜே. செல்லமேஸ்வர், உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற தலைமை நீதிபதிகள் கோவிந்த் மாத்தூர், எஸ். முரளிதர் மற்றும் சஞ்சிப் பானர்ஜி, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகள் அஞ்சனா பிரகாஷ், சி. பிரவீன் குமார், ஏ. கோபால் ரெட்டி, ஜி. ரகுராம், கே. கண்ணன், கே. சந்துரு, பி. சந்திரகுமார் மற்றும் கைலாஷ் கம்பீர் ஆகிய 18 பேர் மற்றும் மூத்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே மற்றும் பேராசிரியர் மோகன் கோபால் ஆகியோர் இணைந்து கூட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளனர்.
அந்த அறிக்கையில், "சல்வா ஜூடும் வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தவறாக புரிந்துகொண்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த தீர்ப்பு வெளிப்படையாகவும் அல்லது எவ்விதத்திலும் நக்சல் மற்றும் அதன் சித்தாந்தத்தை ஆதரிக்கவில்லை.
அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை பாரபட்சமாக தவறாக புரிந்துகொண்டு பேசியிருப்பது, நீதித்துறையின் சுதந்திரத்தை அசைக்கும் வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மீது ஒருவித அச்சத்தை ஏற்படுத்தகூடும் என தெரிவித்துள்ளனர்.