headlines

img

இதைச் சொல்லக் கூட இவ்வளவு நாளா?

இதைச் சொல்லக் கூட  இவ்வளவு நாளா?

குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உடல்நலக்குறைவு காரணமாகவே ராஜினாமா செய்துள்ளார். அவரது ராஜினாமாவுக்கு வேறு காரணங்களைத் தேடுவது சரியல்ல என்று ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.  இதுகுறித்து அதிகம் சிந்திக்கக்கூடாது என்றும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.

நாடாளுமன்றப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், அவர் திடீரென ராஜினாமா செய்தார். 2027ஆம் ஆண்டு வரை பதவியில் நீடிப்பேன் என்றும், தன்னுடைய பணிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வேன் என்றும் அவர் கூறிய அடுத்தநாளே ராஜினாமா அறிவிப்பு வெளியானது. 

ஜகதீப் தன்கர் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டி ருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டிய நிலை யில், அமித் ஷா தற்போது ஒரு காரணத்தை கண்டு பிடித்து கூறியுள்ளார். அமித் ஷாவின் பதில் மேலும் ஆழமான சந்தேகத்தை எழுப்புகிறது. தன் னுடைய ராஜினாமாவுக்கு பிறகு அதுகுறித்து தன்கர் விளக்கம் அளிக்காதது ஏன்? ஊடகங்க ளை சந்திக்க விடாமல் அவர் தடுக்கப்படுவது ஏன்? ராஜினாமா கடிதத்தைத் தவிர அவரிடமி ருந்து வேறு எந்த செய்தியும் இல்லாமல் இருப்பது ஏன்? என்கிற கேள்விகள் எழுகின்றன. 

ஆனால் மிகவும் தாமதமாக அமித் ஷா அளித்துள்ள பதிலில் கூட எதிர்க்கட்சிகளின் கேள்விக்கு உரிய விளக்கம் இல்லை. நாட்டின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்த ஒருவர் என்னவா னார் என்று தெரிந்து கொள்ளும் உரிமை இந்திய மக்களுக்கு உண்டு. 

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான நடைமுறை துவங்கி வாக்குப்பதிவு நடைபெற வுள்ளது. பாஜகவால் அறிவிக்கப்பட்ட வேட்பாள ரான சி.பி.ராதாகிருஷ்ணன் ஆர்எஸ்எஸ் அமைப் போடு தொடர்புடையவர் என்பது ஊரறிந்த ஒன்று. ஒரு ஆர்எஸ்எஸ்காரரை குடியரசுத் துணைத் தலைவர் பொறுப்புக்கு நிறுத்தக்கூடாதா? என்றும் கேள்வி எழுப்புகிறார் அமித் ஷா.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற் காத அமைப்பு ஆர்எஸ்எஸ். தன்னுடைய அலுவ லகத்தில் இந்தியாவின் தேசியக் கொடியைக் கூட அவர்கள் நீண்டகாலம் ஏற்க மறுத்தார்கள். மதச் சார்பற்ற, ஜனநாயக, கூட்டாட்சித் தன்மை கொண்ட இந்தியாவின் அரசியல் சாசனத் தைக்கூட ஆர்எஸ்எஸ் மற்றும் இந்துத்துவா அமைப்பினர் ஏற்க மறுத்தனர். இப்போதும் கூட ஆர்எஸ்எஸ்சின் பல நடவடிக்கைகள் மர்மமா கவே உள்ளன. இந்த பின்னணியில்தான் சி.பி. ராதாகிருஷ்ணன் வேட்பாளராக நிறுத்தப் பட்டுள்ளது ஆழமான கேள்விகளை எழுப்புகிறது.

பாஜக என்பது தனித்து இயங்கும் ஒரு அரசியல் கட்சியல்ல. உண்மையில் ஆர்எஸ்எஸ் சின் நிகழ்ச்சி நிரலையே பாஜக கூட்டணி அரசு ஒவ்வொன்றாக நடைமுறைப்படுத்தி வருகிறது. இந்திய நாட்டை எதேச்சதிகார, ஒற்றைத்தன்மை கொண்ட நாடாக மாற்றும் முயற்சியின் ஒரு பகு தியே சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக நிறுத் தியுள்ளதும் ஆகும். எனவே ஜனநாயக இந்தியா நீடிக்க வேண்டுமானால் அவர் தோற்கடிக்கப்பட வேண்டும்.