india

img

ஆர்.பி.ஐ: புதிய நிர்வாக இயக்குநர் நியமனம்!

இந்திய ரிசர்வ் வங்கியின் (ஆர்.பி.ஐ) புதிய நிர்வாக இயக்குநராக, டாக்டர்.அஜித் ரத்னாகர் ஜோஷி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஒன்றிய அரசின் கீழ் இயங்கும் புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறையில் (DSIM) முதன்மை ஆலோசகராகப் பணியாற்றிய டாக்டர்.அஜித் ரத்னாகர் ஜோஷியை, ஆர்.பி.ஐ-இன் புதிய நிர்வாக இயக்குநராக நியமித்து ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது.

டாக்டர்.ஜோஷி, மார்ச் 3-ஆம் தேதியில் இருந்து ரிசர்வ் வங்கியின் புதிய நிர்வாக இயக்குநராக செயல்படுவார் என்றும், புள்ளியியல் மற்றும் தகவல் மேலாண்மைத் துறை (Department of Statistics and Information Management) மற்றும் நிதி நிலைத்தன்மைத் துறையை (Financial Stability Department) அவர் கவனிப்பார் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.