india

img

மீண்டும் எம்.பி ஆனார் ராகுல் காந்தி!

மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி திரும்பப் பெற்றார்.
கடந்த 2019-ல் மக்களவை தேர்தலின்போது கர்நாடக மாநிலம், கோலாரின் நடந்த பேரணியில் காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி பங்கேற்றார். அதில், ”எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதை அடுத்து,  மோடி என்ற குடும்ப பெயரை மையப்படுத்தி ராகுல் அவதூறாக பேசியது தொடர்பாக பாஜக எம்எல்ஏ மற்றும் குஜராத் முன்னாள் அமைச்சர் புர்னேஷ் மோடி ஆகியோர் குஜராத் நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதை தொடர்ந்து, ராகுல் காந்தியின் மேல்முறையீட்டு மனுக்களை சூரட் நீதிமன்றமும், குஜராத் உயர் நீதிமன்றமும் தள்ளுபடி செய்த நிலையில், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த வழக்கில் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து, தகுதிநீக்கத்தை ரத்து செய்து மக்களவை செயலகம் அறிக்கை வெளியிட்டது. இந்த நிலையில், மக்களவை உறுப்பினர் பதவியை ராகுல் காந்தி திரும்பப் பெற்றார்.