புதுதில்லி பிரான்ஸ் தலைநகர் பாரீ ஸில் நடைபெற்ற பொது ஒலிம்பிக்கின் மகளிர் மல்யுத்தம் 50 கிலோ எடைப்பிரிவில் இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை வினேஷ் போகத், அர சியல் சூழ்ச்சியால் இறுதிப் போட்டி க்கு முன் 100 கிராம் எடை கூடுதலாக இருந்ததாக கூறி தகுதி நீக்கம் செய்யப்பட்டார். அதன் பின்னர் வெள்ளிப் பதக்கம் தருமாறு வினேஷ் போகத் மேல்முறையீட்டு க்குச் சென்ற போதும், அவரது மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், மல்யுத்தத்திலிருந்து விலகுவதாக கனத்த இதயத்துடன் ஓய்வை அறிவித்தார்.
பாரீஸிலிருந்து இந்தியா திரும் பிய பின் வினேஷ் போகத் மல்யு த்தத்திலிருந்து விலகினாலும், மற்ற போராட்டங்களை கைவிட மாட்டேன் என அறிவித்து, தனது நண்பர் பஜ்ரங் புனியாவுடன் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். கட்சியில் இணைந்த அடுத்த சில மணிநேரங்களிலேயே ஹரியானா ஜீலனா சட்டமன்ற தொகுதியில் போட்டியிட காங்கிரஸ் சீட் வழங்கியது.
பாரீஸ் ஒலிம்பிக்கில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட பொழுது வினேஷ் போகத்திற்கு ஆதர வாகவும், அனைத்து உதவிகளும் செய்ததாக இந்திய ஒலிம்பிக் தலை வரும், பாஜக சார்பில் தேர்ந்தெடுக் கப்பட்ட மாநிலங்களவை எம்.பி., பி.டி.உஷா (வினேஷ் போகத்தை பாரீஸ் மருத்துவமனையில் சந்தித்த பொழுது) கூறினார். ஆனால் இது பொய் என வினேஷ் போகத் கூறியுள்ளார்.
இதுகுறித்து வினேஷ் போகத் கூறுகையில்,”பி.டி.உஷா தனக்கு ஆதரவு அளிக்கவில்லை. பி.டி.உஷா தன்னுடன் நின்றுகொண்டு வெறும் போட்டோ மட்டும் தான் எடுத்துக்கொண்டார். மருத்துவ மனையில் இருந்த போது தனது ஒப்புதல் இன்றி பி.டி.உஷா போட்டோ எடுத்துக்கொண்டார். உண்மையில் உறுதுணையாக இல்லை. பாரீஸ் நகரில் எனக்கு என்ன ஆதரவு கிடைத்தது என தெரியவில்லை. மல்யுத்தத்தை கைவிட வேண்டாம் என்று பலரும் கூறினர். எதற்காக மல்யுத்தத்தை நான் தொடர வேண்டும். எல்லா இடங்களிலும் அரசியல் உள்ளது. நான் மருத்துவமனையில் சிகிச்சை யில் இருந்தபோது வெளியில் என்ன நடந்ததென்று எனக்குத் தெரியவில்லை. வாழ்வில் மிகவும் கடினமான கட்டத்தை நான் கடந்து கொண்டிருந்தேன். அப்போது பி.டி.உஷா எனக்கு ஆதரவு தருவதுபோல என் அனுமதியில் லாமல் புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்து நான் உங்களுடன் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். இதுபோன்று தான் ஒருவர் ஆதரவு தருவார் களா. இது முழுக்க முழுக்க அரசி யல். முறையான நடவடிக்கை இல்லை. வெறும் நடிப்பு” என குற்றம்சாட்டியுள்ளார்.