ஸ்ரீஹரிகோட்டா, டிச. 5 - இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறு வனத்தின் (இஸ்ரோ) ஓா் அங்கமான ‘நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட்’ அமைப்பு மூலம் வெளிநாட்டு செயற்கைக்கோள்கள் வா்த்தக ரீதியாக விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சூரியனின் புறவெளியை ஆய்வு செய்வதற்காக ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக் கோளை ஐரோப்பிய விண்வெளி ஆய்வு (இஎஸ்ஏ) நிறுவனம் வடி வமைத்து, இந்தியாவின் பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் விண்ணில் நிலை நிறுத்த ஒப்பந்தம் மேற்கொண்டி ருந்தது.
அதன்படி ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவாண் ஏவுதளத்திலி ருந்து ப்ரோபா-3 எனும் இரட்டை செயற்கைக்கோள்களுடன், இந்தியா வின் பிஎஸ்எல்வி சி-59 ராக்கெட் மூலம் வியாழனன்று மாலை 4.04 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது.
சூரிய ஒளி வட்டத்தை ஆய்வு செய்யும் ‘புரோபா-3’ இரட்டை செயற்கைக்கோள் புவியில் இருந்து 60,500 கி.மீ. தொலைவில் உள்ள சுற்றுவட்டப் பாதையில் நிலை நிறுத்தப்பட உள்ளது. அங்கிருந்த படியே 2 செயற்கைக்கோள்கள் 150 மீட்டர் இடைவெளியில் அருகருகே பயணித்து சூரியனின் புறவெளி பகுதியை ஆய்வு செய்து தரவுகளை அனுப்ப உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
உலகின் முதல் திட்டம்
ஐரோப்பிய (ஸ்பெயின், இத்தாலி, பெல்ஜியம், போலந்து, சுவிட்சர்லாந்து) விஞ்ஞானிகளுடன், இஸ்ரோ விஞ்ஞானிகள் இணைந்து சூரியனின் ஒளிவட்டம் பற்றிய ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். புரோபா-3 விண்கலத்தில் இருக்கும் இரண்டு செயற்கைக்கோள்களும் ஒன்றாக இணைந்து செயல்பட உள்ளன. ஓர் ஆய்வுக்கு இரண்டு செயற்கை கோள்கள் ஒரே நேரத்தில் செலுத்தப் படுவது உலகில் இதுவே முதல் முறை.
கொரோனாகிராஃப் மற்றும் ஆக்ல்டர் எனும் இந்த இரண்டு செயற்கைக்கோள்களும் சில மில்லிமீட்டர்கள் இடைவெளியில் 144 மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்தில் இருக்கும். இதன் விளை வாக, இந்த ஜோடி ஒரு மெய்நிகர் ராட்சத செயற்கைக்கோளை போல செயல்படும். மேலும், இது தரையில் இருந்து பெறப்படும் கட்டளைகள் எதுவும் இல்லாமல் தானாகவே இயங்கும்.