சென்னை,மார்ச்.17- வங்கி ஊழியர்கள் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
வங்கிகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அனைவருக்கும் அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 24 மற்றும் 25 ஆகிய இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.