இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.
குரங்கு அம்மை நோய் முதன்முதலில் 1958 ஆம் ஆண்டு குரங்குகளில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த நோய் பின்னாளில் மனிதர்களுக்கும் பரவ ஆரம்பித்தது. 1970 ஆம் ஆண்டு முதன்முதலில் மனிதருக்கு குரங்கு அம்மை நோய் பரவியது.
மனிதர்களிடையே பரவிய சின்னம்மை, பெரியம்மை நோய் போன்று குரங்குகளிடம் இருந்து பரவிய அம்மை நோய் மனிதர்களிடையே பரவுவதையே குரங்கு அம்மை நோய் என அழைக்கப்படுகின்றன.
இந்நிலையில், குரங்கு அம்மை நோய், 20க்கும் மேற்பட்ட நாடுகளில் சுமாா் 200க்கும் மேற்பட்டோருக்கு பரவியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மை நோய் சமூகப் பரவலாக மாறும் அபாயம் உள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. இது வேகமாக பரவும் நோயல்ல என்றாலும், சமூக பரவலாக மாறக்கூடிய அபாயம் உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை தொடர்ந்து பின்பற்றி வருவதாகவும், வெளிநாடுகள் மற்றும் குரங்கு அம்மை பாதிப்பு உள்ள நாடுகளில் இருந்து வருபவர்களை பரிசோதனைக்கு உட்படுத்தி தீவிரமாக கண்காணித்து வருவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.