புதுதில்லி, டிச. 5 - அதானி மீதான லஞ்ச - முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தி வியாழனன்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளா கத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, அவர்கள் ‘மோடியும் அதானியும் ஒன்று’ என பொறிக்கப்பட்ட ஆடையை அணிந்தபடி முழக்கங்களை எழுப்பினர். மேலும், ராகுல் காந்தி பேசுகையில், “மோடியும் அதானியும் ஒன்றுதான், இருவரும் வேறு வேறு அல்ல. அதானி மீதான லஞ்சப் புகார் விவகாரத்தில் விசார ணை நடத்த பிரதமர் மோடி ஒத்துக் கொள்ளமாட்டார். ஏனெனில், அதானி மீது விசாரணையைத் தொடங்கினால் பிரதமர் மோடியும் விசாரணைக்கு ஆளாவார்’ என்று கூறினார்.
முன்னதாக எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மக்களவைக்குள்ளும் அதானி விவகாரம், மணிப்பூர் வன்முறை, சம்பலுக்குச் செல்ல முயன்ற ராகுல் காந்தியை தடுத்து நிறுத்தியது உள்ளிட்ட விவகாரங்களை எழுப்பி விவாதத்திற்கு அனுமதி கோரி னர். சபாநாயகர் ஓம் பிர்லா அதற்கு அனுமதி அளிக்கவில்லை.
இதனால் ஏற் பட்ட அமளி காரணமாக பிற்பகல் 2 மணி வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. மாநிலங்களவையில் தமிழகத்தின் மழை - வெள்ளப் பாதிப்பு குறித்து விவாதிக்குமாறு திமுக எம்.பி. திருச்சி சிவா, அதிமுக எம்.பி. தம்பிதுரை ஆகி யோர் நோட்டீஸ் அளித்தனர். இதனை பூஜ்ஜிய நேரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்வதாக கூறிய மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தன்கர், பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதியை பேச அழைத்தார். அவர், இந்தியாவின் வளர்ச்சியை தடுக்கும் வகையில் நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கும் முன்பு வெளி நாட்டு நிதி உதவியுடன் விவசாயிகள் போராட்டம் நடைபெற்றதாகவும், நாடாளு மன்ற கூட்டத் தொடர்கள் தொடங்கும் முன்பு அவையை முடக்கும் வகையில் வெளி நாட்டு நிதி உதவியுடன் பெகாசஸ் உளவு விவகாரம், ஹிண்டர்பர்க் அறிக்கை உள்ளிட்டவை வெளியிடப்பட்டதாகவும் கூறினார்.
இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அப்போது ஏற்பட்ட அமளி யால், தொடங்கிய 16 நிமிடத்துக்குள் நண்பகல் 12 மணி வரை மாநிலங்களவை ஒத்தி வைக்கப்பட்டது.