india

img

அரசு நலத்திட்டங்களால் தொழிலாளர்களே கிடைப்பதில்லையாம்! - எல்&டி தலைவர் சுப்ரமணியன் சர்ச்சை கருத்து

அரசு நலத்திட்டங்களால் தொழிலாளர்கள் கிடைப்பதில்லை; இது வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது என எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்து வகையில் பேசியிருக்கிறார்.
அண்மையில், ரெட்டிட் தளத்தில் எல் & டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்பிரமணியம், "வாரத்தில் 90 மணி நேரம் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டும்; ஞாயிற்றுக்கிழமைகளிலும் வேலை செய்தால் மகிழ்ச்சி; வீட்டில் உட்கார்ந்து என்ன செய்வீர்கள்? எவ்வளவு நேரம் உங்கள் மனைவியை வெறித்துப் பார்க்க முடியும்? மனைவிகள் தங்கள் கணவர்களை எவ்வளவு நேரம் வெறித்துப் பார்க்க முடியும்? வாருங்கள், அலுவலகத்திற்குச் சென்று வேலையைத் தொடங்குங்கள்” என சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். இவரது இந்த பேச்சிற்கு நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்தது.
இந்த நிலையில், “அரசிடம் இருந்து நலத்திட்டங்கள், நிதியுதவி கிடைப்பதால் கட்டுமான வேலைகளுக்கு தொழிலாளர்கள் பெருமளவில் தற்போது வருவதில்லை. தொழிலாளர்கள் பற்றாக்குறை வருத்தத்துக்குரிய விஷயமாக உள்ளது” என எல்&டி நிறுவனத்தின் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியன் மீண்டும் சர்ச்சை ஏற்படுத்து வகையில் பேசியிருக்கிறார்.