ஜம்மு காஷ்மீரில் 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் திங்கள்கிழமை மாலை 5:19 மணியளவில் 5.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் இட்காவின் வடமேற்கு பகுதியில் 38 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
கில்ஜித்-பல்திஸ்தான் பகுதியில் ஹன்சா, கில்ஜித், காஸர் மற்றும் கர்டு ஆகிய இடங்களில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் வீடுகளில் இருந்து வெளியேறிய மக்கள் தெருக்களில் தஞ்சம் புகுந்தனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாக வில்லை.
இதனிடையே, ஜம்மு காஷ்மீரில் திங்கள்கிழமை இரவு 2 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 முறை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கடும் அச்சத்தில் உள்ளனர்.