india

img

ஜிசாட்-1 செயற்கைக்கோளை நாளை விண்ணில் செலுத்தத் தயாராகி வரும் இஸ்ரோ

ஜிசாட்-1 செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய உள்ள ஜி.எஸ்.எல்.வி.எப் 10 ராக்கெட்டுக்கான கவுன்ட்டவுன் அதிகாலை தொடங்கியது.

ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து ஜிசாட்-1 செயற்கைக் கோள், ஜி.எஸ்.எல்.வி.எப் 10  ராக்கெட் மூலம் நாளை அதிகாலை 5 மணி 43 நிமிடங்களுக்கு விண்ணில் செலுத்தப்பட உள்ளது. அதற்கான கவுன்ட்டவுன் இன்று காலை 3 மணி 43 நிமிடங்களுடக்கு துவங்கி விட்டதாக இஸ்ரோ 
டுவிட்டரில் தெரிவித்துள்ளது.

ஜிசாட்-1  என்பது புவியைக் கண்காணிக்கும் செயற்கைக் கோளாகும், அது பூமியின் புவி வட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்ட பின்னர் பூமியின் சுழற்சி வேகத்திற்கு இணையான வேகத்தில் பூமியைச் சுற்றி வரும்.  

மேலும் இயற்கை பேரழிவுகள் குறித்த முன்னெச்சரிக்கைகளை அதிவேகத்தில் அது அனுப்பும், வேளாண்மை, வனம், சுரங்கம், வானிலை, கடல் உள்ளிட்டவை தொடர்பான விவரங்களைச் சேகரிக்கவும் இந்த செயற்கைக்கோள் உதவும் எனக் கூறப்படுகிறது.

2 ஆயிரத்து 268 கிலோ எடை உள்ள இந்த  செயற்கைக்கோள் முதன்முறையாக இஸ்ரோவால் ogive வடிவத்தில் 4 மீட்டர் சுற்றளவுடன் உருவாக்கப்பட்டுள்ளது. 
இதைச் சுமந்து செல்லும் ஜி.எஸ்.எல்.வி.எப் 10 ராக்கெட், புவி ஒத்திசைவுக்கு ஏற்ற செயற்கைக் கோளை சுமந்து செல்லும் 14 ஆவது ராக்கெட்டாகும்.