india

img

வேண்டும்.. வேண்டும்.. அதானியை விசாரிக்க வேண்டும்

புதுதில்லி, டிச. 3 - இந்தியாவில் ‘அதானி கிரீன் எனா்ஜி’ நிறுவனம் விநியோகித்த சூரிய  மின்சக்தியை வாங்க பல்வேறு மாநில மின்பகிா்மான நிறுவன அதிகாரி களுக்கு 265 மில்லியன் டாலா் லஞ்சம் அளிக்கப்பட்டதாக அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் அதானியை கைது செய்யவும், நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைத்து விசாரணை மேற்கொள்ளவும் ஒன்றிய அரசை எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

5 நாட்களாக முடக்கம்

ஆனால், அதானியின் பெயரைக் கூட நாடாளுமன்றத்தில் எழுப்ப விட  மாட்டோம் என்று மோடி அரசு பிடி வாதமாக உள்ளது. இதனால், நவம்பர் 25 அன்று குளிர்காலக் கூட்டத்தொடர் துவங்கியது முதலே இரு அவைகளி லும் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வருகின்றன. நாடாளுமன்றமும் தொடர்ந்து முடங்கி வருகிறது.

இதனிடையே செவ்வாயன்று 6-ஆவது நாளாக நாடாளுமன்றம் கூடியது.  முன்னதாக மக்களவை சபா நாயகர் ஓம் பிர்லா தலைமையில் திங்களன்று நடைபெற்ற அனைத்து கட்சி கூட்டத்தில் நாடாளுமன்றத்தை சுமூகமாக நடத்துவது குறித்து உடன்பாடு ஏற்பட்டது. 

இதனால், செவ்வாயன்று முக்கியப் பிரச்சனைகளை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ள பாஜக அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சம்பல் மசூதியை முன்வைத்து, பாஜக கலவரத்தை தூண்டுவது பற்றி சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் எழுப்பிய பிரச்சனைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

இதனால், சமாஜ்வாதி எம்.பி.க் களும், திமுக, என்சிபி, சிவசேனா உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்களும் முழக்கங்களை எழுப்பி வெளிநடப்பில் ஈடுபட்டனர். பின்னர், கேள்வி நேரத்தில் பங்கேற்பதற்காக இந்தியா கூட்டணி எம்பிக்கள் தங்களது இருக்கைக்கு திரும்பினர்.

அதானி பெயரைக் கூறவே கூடாதென்றும் அராஜகம்

அதானி மீதான அமெரிக்க வழக்கு, சம்பல் வன்முறை, மணிப்பூர் கலவரம் ஆகியவை குறித்து விவாதிக்க வேண்டும் என இரு அவைகளிலும் வலியுறுத்தினர். 

மக்களவையில் அதானி பெயரை  காங்கிரஸ் எம்.பி. கவுரவ் கோகோய் கூறியதற்கு பாஜக எம்.பி.க்கள் ஒட்டு மொத்தமாக எழுந்து எதிர்ப்பு தெரிவித்த னர். அவையில் உறுப்பினராக இல்லாத வர் பெயரை எதிர்க்கட்சியினர் கூறக் கூடாது என சபாநாயகர் சமாளித்தார்.

அப்போது, “உறுப்பினராக இல்லாதவர்களின் பெயர்களைக் கூறி  அமைச்சர்களும், பாஜக எம்.பி.க்களும் எதிர்க்கட்சியினரை குற்றம்சாட்டும் போது ஏன் அமைதியாக இருந்தீர்கள்? பாரபட்சம் இன்றி சபாநாயகர் நடக்க வேண்டும்” என திமுக எம்.பி. ஆ. ராசா  கண்டனம் தெரிவித்தார். இந்த விவ காரத்தில் நாடாளுமன்றத்தில் அமளி ஏற்பட்டது. 

42 நோட்டீஸ்களை தள்ளுபடி செய்த ஜகதீப் தன்கர்

மாநிலங்களவையில் அதானி விவகாரம் உள்பட பல்வேறு பிரச்ச னைகள் தொடர்பாக அளிக்கப்பட்டி ருந்த 42 நோட்டீஸ்களை மாநிலங்கள வைத் தலைவர் ஜகதீப் தன்கர் தள்ளுபடி செய்தார். இதனால், அங்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால், இரண்டு அவைகளில் இருந்தும் வெளி நடப்பு செய்த இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தலைமையில் நாடாளுமன்றம் முன்பு ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். தி.மு.க மாநிலங்கள வை எம்.பி திருச்சி சிவா,“வேண்டும், வேண்டும்... அதானி பற்றி விவாதம் வேண்டும்” என்று தமிழில் முழக்கமிட் டார். அவர் கூறியதை ராகுல் காந்தி உட்பட இந்தியா கூட்டணி கட்சிகளின் எம்.பி.க்களும் அப்படியே திரும்பக் கூறி தமிழில் முழக்கமிட்டனர்.