கேரள மாநிலத்தில் கனமழை தீவிரம டைந்துள்ள நிலையில், அடுத்த 2 நாட்க ளுக்கு பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம்.
ஆந்திராவில் வாக்குப்பதிவு நிறைவு பெற்ற நிலையில், அம்மாநில முதல்வர் ஜெகன் மோகன் குடும்பத்துடன் லண்டனுக்கு தனி விமா னத்தில் சுற்றுலா சென்றுள்ளார்.
சிக்கிமின் சிங்தாம் அருகே சனியன்று சுற்று லாப் பயணிகளுடன் ஒரு டாக்ஸி ஆற்றில் கவிழ்ந்ததில் இரண்டு பேர் உயிரிழந்தனர். 4 பேர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர்.
உணவுப் பொருட்களில் அதிக அளவிலான பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு குறித்து பதிலளிக்குமாறு ஒன்றிய அரசு மற்றும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணை யத்துக்கு (எப்எஸ்எஸ்ஏஐ) உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
“பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி இருக்கும் பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக சாத்தியமான அனைத்து சட்ட வழிகளை யும் அரசு தொடர வேண்டியது அவசியம்” என அவ ரது தாத்தாவும், முன்னாள் பிரதமருமான தேவ கவுடா தெரிவித்துள்ளார்.
மே 21 வரை ராஜஸ்தான், பஞ்சாப், ஹரி யானா, உத்தரப்பிரதேசம், குஜராத், தில்லி யின் பல பகுதிகள் உட்பட வட இந்தியாவில் கடுமை யான வெப்ப அலை வீச வாய்ப்புள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள் ளது.
திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதி கரித்து வரும் நிலையில், வெள்ளியன்று ஒரே நாளில் ரூ.3.63 கோடியை பக்தர்கள் காணிக்கை யாக செலுத்தியுள்ளனர்.
தாய்லாந்து ஓபன் பேட்மிண்டன் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு இறுதி ஆட்டத் திற்கு இந்தியாவின் முதன்மையான ஆடவர் இரட்டையர் ஜோடியான சாத்விக் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி முன்னேறியது.
அகமதாபாத்
620 ஏக்கர் சுவாஹா
ஓர் ஊரையே அபகரித்த குஜராத் ஜிஎஸ்டி ஆணையர்
பாஜக ஆளும் குஜராத் மாநி லத்தைச் சேர்ந்த ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வால்வி. இவர் தற் போது அகமதாபாத் மண்டல ஆணைய ராக பணியாற்றி வருகிறார். மகா ராஷ்டிரா மாநிலம் நந்தூர்பரைச் சேர்ந்த சந்திரகாந்த் வால்வி, சதாரா மாவட்டத்தில் (மகா ராஷ்டிரா) உள்ள கண்டாடி பள்ளத் தாக்கில் 600 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தை வாங்கியுள் ளார். புரியும்படி சொன்னால் மகாபலேஷ்வருக்கு அரு கிலுள்ள ஜடானி என்கிற முழு கிராமத் தையே சந்திரகாந்த் வாங்கியுள்ளார்.
620 ஏக்கர் சுருட்டல் எப்படி?
அரசாங்கம் ஜடானி கிராமத்தின் நிலப் பகுதிகளை கைப்பற்ற போவதாக கூறி 620 ஏக்கர் நிலத்தை கிராம மக்களிடம் பறித்துள்ளார் சந்திரகாந்த் வால்வி. குறிப்பாக நிலம் வாங்கியதில் சுற்றுச் சூழல் பாதுகாப்புச் சட்டம் 1986, வனப் பாதுகாப்புச் சட்டம் 1976, வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டம் 1972 போன்ற பல முக்கியமான சட்டங்களை கண்டுகொள் ளாமல், சட்டங்களை மீறி சந்திரகாந்த் வால்வி நிலங்களை தன் வசம் எடுத் துக்கொண்டார். இந்த விவகாரம் தொடர் பாக சுற்றுச்சூழல் ஆர்வலர் சுஷாந்த், ஜிஎஸ்டி ஆணையர் சந்திரகாந்த் வால்வி மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த கோரிக்கை வைத்துள்ளார்.
Iபுதுதில்லி
நாட்டில் 40% வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல்லை
வாகன விபத்து தொடர்பான வழக்கில்,”இந்தியாவில் 40% வாகனங்கள் இன்சூ ரன்ஸ் இல்லாமல் இயங்குகின்றன” என ஒன்றிய அரசு உச்சநீதிமன்றத்தில் அதிர்ச்சி தகவலை கூறியுள்ளது. இது குறித்த ஒன்றிய அரசின் விபத்து அறிக்கை தரவுகளில்,”சாலை விபத்துகளில் 60% வாகனங்களுக்கு மட்டுமே மூன்றாம் நபர் இழப்பீடு வழங்கப்படுகிறது. மற்ற 40% வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் இல் லாததால் விபத்துக்குள்ளான நபர்கள் இழப்பீடு கோர முடியாமலும், நஷ்ட ஈடு கோர முடியாமலும் தவிக்கின்றனர்” எனக் கூறப்பட்டுள்ளது.