தில்லி,ஜனவரி.24- கடும் பனிமூட்டம் காரணமாக விமானங்கள், ரயில்கள் வருகையில் தாமதமாவதால் பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்
புதுதில்லியில் கடந்த சில நாட்களாக கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்ட வெளிச்சமின்மையால் ரயில், விமானங்களின் வருகையில் தாமதமாகியுள்ளது.
தில்லியில் பனிமூட்டம் மேலும் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் விமானச் சேவையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகத் தில்லி சர்வதேச விமான நிலையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதனால் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ள சிரமத்திற்கு வருத்தம் தெரிவித்து எக்ஸ் தளத்தில் தில்லி சர்வதேச விமான நிலையம் வருத்தம் தெரிவித்துள்ளது.