உலக பிரசித்திப் பெற்ற சுற்று லாத்தலங்களில் ஒன்றான தாஜ்மஹால் உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ளது. இந்நிலையில், தாஜ்மஹாலுக்கு செவ்வாய்க்கிழமை காலை மின்னஞ்சல் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது.
சுற்றுலாத்துறையின் மின்னஞ்சலுக்கு மிரட்டல் செய்தி வந்த வுடன் தாஜ்மஹால் வளாகத்தின் பாது காப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.சிஐஎஸ்எப் மற்றும் ஏஎஸ்ஐ பணியாளர்கள் வளாகம் முழுவதும் விசாரணை நடத்தி வருகின்ற னர். மோப்ப நாய் மற்றும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் தேடி வருகின்றனர்.
இந்த வெடிகுண்டு மிரட்டலால் தாஜ் மஹால் மட்டுமின்றி ஆக்ரா, தில்லி, நொய்டா ஆகிய பகுதிகளில் பதற்ற மான சூழல் ஏற்பட்டுள்ளது.