புதுதில்லி நாடாளுமன்றத்தில் தற்போது குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வரு கிறது. இந்த கூட்டத்தொடரில் பிரதமர் மோடியின் நண்பரான அதானியின் முறைகேடு விவகாரம், சம்பல் வன்முறை, மணிப்பூர் விவகாரம் உள்ளிட்ட பிரச்சனைகளை விவா தத்திற்கு எடுக்க வேண்டும் என நாடாளுமன்ற இரு அவைகளிலும் “இந்தியா” கூட்டணி எம்.பி.,க்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மோடி அரசோ விவாதத்திற்கு அஞ்சி எதிர்க்கட்சிகளை போராட்டம் நடத்த தூண்டி நாடாளுமன்ற நட வடிக்கையை முடக்கி வருகிறது. இத னால் நாடாளுமன்றத்தின் இரு அவை களும் 6 நாட்களுக்கு மேலாக முடங்கி யுள்ளன.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை மாநிலங்களவையில் உரை யாற்றிய ஜகதீப் தன்கர் (மாநி லங்களவை தலைவர்), “காங்கிரஸ் எம்.பி., அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில் இருந்து பாதுகாப்பு ஊழியர்களால் ரூபாய் நோட்டு கட்டு ஒன்று வியாழக் கிழமை (டிச. 5) அன்று கண்டெடுக்கப் பட்டது. இதுகுறித்து எனக்கு தெரி விக்கப்பட்டது. 500 ரூபாய் மதிப்புள்ள 100 நோட்டுக்கள் கண்டெடுக்கப் பட்டுள்ளன. இது குறித்து அவைக்கு தெரியப்படுத்த வேண்டியது எனது கடமை. எனவே தெரிவித்துள்ளேன். இந்த பணத்துக்கு யாராவது உரிமை கோருவார்கள் என காத்திருந்தேன். இதுவரை யாரும் உரிமை கோர வில்லை. இவ்வளவு பெரிய தொகை யை (ரூ. 50,000) மறப்பது நாட்டின் பொருளாதாரத்தை பிரதிபலிக் கிறதா? இது குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது” எனக் கூறினார்.
ஜகதீப் தன்கரின் இந்த அறி விப்பை அடுத்து அபிஷேக் மனு சிங்வியை அவையில் இருந்து வெளி யேற்ற வேண்டும் என்று பாஜக எம்.பி.,க்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “இந்த விவகாரம் குறித்து முழுமை யாக விசாரித்தால்தான் அது யாரு டைய பணம் என்பது தெரிய வரும். விசாரணையை முடிக்காமல் அவைத் தலைவர் உறுப்பினரின் பெயரைக் கூறி இருக்கக்கூடாது” எனக் கூறி கண்டனம் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த தன்கர்,“இது எனது கடமை. சபைக்கு தெரிவிக்க நான் கடமைப்பட்டிருக்கிறேன். வழக்கமான நாசவேலை எதிர்ப்பு சோதனையின்போது இந்த பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது” என மழுப்பலாகக் கூறினார்.
அபிஷேக் மனு சிங்வி மறுப்பு
இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அபி ஷேக் மனு சிங்வி,“இதற்கு முன்பு வரை இதுபோல ஒரு விஷயத்தை நான் கேள்விப்பட்டதே இல்லை. நான் எப்போதும் மாநிலங்களவைக் குச் செல்லும் போது ஒரே ஒரு 500 ரூபாய் நோட்டை மட்டுமே எடுத்துச் செல்வேன். மாநிலங்களவையில் பணம் கைப்பற்றியது தொடர்பாக இப்போது தான் முதல்முறையாகக் கேள்விப்படுகிறேன். நான் மதியம் 12:57 மணியளவில் நாடாளுமன்றம் சென்றேன். இருப்பினும் நான் சென்ற வுடன் மதியம் 1 மணிக்கு அவையை ஒத்திவைப்பதாக அறிவித்துவிட்டார் கள். 1 மணி முதல் 1.30 வரை நான் உணவகத்தில் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டேன். 1.30 மணிக்கு நான் நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறினேன். இது போன்ற ஒரு பிரச்சனையில் என் பெயரை இழுத் திருப்பது வினோதமாக இருக்கிறது” என அவர் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்க சதியா?
மாநிலங்களவை இருக்கையில் பணம் கண்டெடுக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும். அபிஷேக் மனு சிங்வி அமரும் இடத்தில் இருந்து பணம் கைப்பற்றிய அறிவிப்பு வெளியான சில நொடி களிலேயே பாஜக எம்.பி.,க்கள் முன்கூட்டியே சொல்லி வைத்தது போல அமளியில் ஈடுபட்டது பலத்த சந்தேகத்தை கிளப்பியுள்ளது. ஒரு வேளை அதானியின் முறைகேட்டை மறைக்கவும், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் குரலை ஒடுக்கவும் பணக்கட்டு மூலம் பாஜக சதியை அரங்கேற்றியுள்ளதா? என்ற சந்தேகமும் வலுத்து வருகிறது.
சிசிடிவி இல்லையா?
“எனது இருக்கையில் இருந்த பணம் என்னுடையது இல்லை” என அபிஷேக் மனு சிங்வி கூறுகிறார். “இதுவரை யாரும் பணத்திற்கு உரிமை கோரவில்லை” என மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் கூறியுள்ளார். அப்படி என்றால் மாநிலங்களவையில் கண்டெடுக்கப்பட்ட பணம் சந்தேகத்திற்குரியது என்பது நிரூபணமாகியுள்ளது. பணத்தை கைப்பற்றிய பொழுது அபிஷேக் மனு சிங்வியிடம், ஜகதீப் தன்கர் ஒரு வார்த்தை கேட்டு இருக்கலாம். அவரிடம் விசாரித்த பிறகு, இந்த பணம் யாருடையது என்பதை கண்டறிய சிசிடிவி ஆதாரங்களையும் ஆய்வு செய்தால் உண்மை என்ன என்பது தெரிந்துவிடும். ஆனால் பணம் கண்டெடுத்ததை மாநிலங்களவையில் முதல் அறிவிப்பாக ஜகதீப் தன்கர் அறிவித்தது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.