புதுதில்லி:
கர்நாடக முன்னாள் அமைச்சரும் காங்கிரஸின் மூத்த தலைவருமான டி.கே.சிவகுமாரின் வீட்டில் நடந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.8.59 கோடி பணம் சிக்கியது.விசாரணையில் கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் அவர் மீது சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்குப்பதிவு செய்த அமலாக்கத் துறையினர், செப்டம்பர் 3 ஆம் தேதி டி.கே.சிவகுமாரை கைது செய்தனர். நீதிமன்றக்காவலில் சிறையில் இருந்த டி.கே.சிவக்குமார் ஜாமீன் கோரி, சிபிஐசிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவைசிபிஐ சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதையடுத்து தில்லி உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். மனுவை விசாரித்த தில்லி உயர்நீதிமன்றம், டிகே சிவக்குமாருக்கு ரூ.25 ஆயிரம் சொந்தப்பிணையில் ஜாமீன் வழங்கியுள்ளது.