புதுதில்லி, ஜூன் 9- பயணிகளுக்கான விமான நிலையப் பாதுகாப்புக் கட்ட ணம் ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தப்படவுள்ளது. 105 விமான நிலையங்களில் 59 விமான நிலையங்கள் மத்திய தொழில் பாதுகாப்புப் படையினராலும், பிற விமான நிலையங்கள் சிஆர்பிஎப், ஐ.ஆர்.பி. அல்லது மாநில காவல் துறை பிரிவினராலும் பாதுகாக்கப்படுகிறது. 2001 ஆம் ஆண்டு விமான நிலையத்துக்கு வரும் பயணி களுக்கு தலா 130 ரூபாய் என பாதுகாப்புக் கட்டணம் நிர்ண யிக்கப்பட்டது. தற்போது, விமான நிலைய ஆபரேட்டர்கள் பாதுகாப்புக்காக துணைராணுவப் படைகளுக்கு 750 கோடி ரூபாய் வழங்கி வருவதாகவும், இந்த செலவைத் தாக்குப் பிடிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளது. எனவே 18 ஆண்டுகளுக்குப் பின் முதன்முறையாக உள்நாட்டு விமானப் பயணிகளுக்கு தலா 130 ரூபாயாக இருந்த பாது காப்புக் கட்டணம் 150 ரூபாயாகவும், வெளிநாடுகளுக்கு சென்று வரும் விமானப் பயணிகளுக்கு 4.85 டாலர் கட்டண மும் வரும் ஜூலை 1 முதல் வசூலிக்கப்படும் என்று மத்திய விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சகம் தெரிவித் துள்ளது. இந்தக் கட்டணம் பயணிகளின் டிக்கெட் விலை யுடன் சேர்த்து வசூலிக்கப்படும்.