india

img

முடங்கியது அம்பானியின் ஜியோ

பிரதமர் மோடியின் நெருங்கிய நண்ப ரும், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவருமான முகேஷ் அம்பானி ஜியோ என்ற பெய ரில் தொலைத்தொ டர்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த ஜியோ நிறுவ னம் சிம் மற்றும் வைபை மூலம் நாடு முழுவதும் தொலைத் தொடர்பு மற்றும் இணைய நெட்வொர்க்கை செயல் படுத்தி வருகிறது.

இந்நிலையில், செவ்வாயன்று காலை முதல் மகாராஷ்டிராவின் தலைநகர் மும்பை உள்ளிட்ட நாட்டின் பெரும்பா லான இடங்களில் ஜியோ நெட்வொர்க் முடங்கியது. செவ்வாயன்று மதியம் வரை 10,552 ஜியோ பயனர்கள் நெட் வொர்க் கிடைக்கவில்லை என ஜியோ வில் அதிகாரப்பூர்வமாக புகாரளித்துள் ளனர் என்று டவுன் டிடெக்டர் (ஆன்லைன் இணையப் பிரிவு செய்தி) தகவல் தெரி வித்துள்ளது. அதன்பின் செவ்வாயன்று மாலை ஜியோ நெட்வொர்க் ஓரளவுக்கு இயல்புநிலைக்கு திரும்பியதாக செய்தி கள் வெளியாகின.