புதுதில்லி,அக்டோபர்.27- தில்லியில் காற்று மாசு மிகவும் மோசமாக அதிகரித்திருப்பதாக மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.
சமீபகாலமாகத் தில்லியில் காற்று மாசு அதிகரித்துக்கொண்டுள்ளது குறிப்பாகக் கடந்த இரண்டு நாட்களில் காற்று மாசு மீண்டும் மிக மோசமான நிலைக்குச் சென்றுள்ளதாக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் கூறியுள்ளது.
நேற்று 255 ஆக இருந்த தரக் குறியீடு இன்று காலை 9 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 359 ஆக அதிகரித்துள்ளது. காற்று மாசின் காரணமாக ஏற்கனவே ஜனவரி 1ஆம் தேதி வரை பட்டாசு வெடிக்க, விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.