india

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

ஓணம் பண்டிகையை முன்னிட்டு சபரி மலைக்கு பக்தர்கள் வருகை அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், திரு வனந்தபுரம், செங்கணூர், கோட்டயம், பத்தனம்திட்டா, கொல்லம், எர்ணாகுளம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து பம்பைக்கு கேரள அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.3000 வழங்கப்படும் என காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிடும் மல்யுத்த வீராங்கனை வினேஷ் போகத் (ஜூலனா தொகுதி) புதனன்று வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லா தொகுதி எம்.பி.யான பொறியாளர் ரஷீத் புதனன்று ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். பொறியாளர் ரஷீத் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி செய்ததாகக் கூறப்படும் வழக்கில் தில்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் அருகே  நங்கல் கிராமத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

உத்தரகண்ட் மாநிலம் கேதாா்நாத் நெடுஞ்சா லையில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந் தோர்களின் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது. 

மதுபான கொள்கை முறைகேடு புகாரில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் தில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் நீதிமன்ற காவல் (தில்லி உயர்நீதிமன்றம்) செப்.,25 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வடக்கு கேரள கடற்கரையிலிருந்து தெற்கு குஜராத் கடற்கரை வரை குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. மியான்மரில் தற்போது உருவாகியுள்ள புயல் அடுத்த இரண்டு நாட்களில் வங்கதேசம் மற்றும் வடமேற்கு வங்காள விரிகுடாவுக்கு நகர வாய்ப்புள்ளது. இதன் காரணமாக கேரளத்தில்  பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக மத்திய வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

ஸ்ரீநகர்
பாஜகவை மிரட்டும் தோல்வி பயம்
பரூக் அப்துல்லா மீது வழக்கு தொடர அமலாக்கத்துறை மனு

நீண்ட காலத்திற்குப் பிறகு ஜம்மு -காஷ்மீரில் 3 கட்டமாக சட்ட மன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலை யில், முதல் கட்ட வாக்குப்பதிவு செப்டம் பர் 18 அன்று நடைபெறுகிறது. இந்த  தேர்தலில் தேசிய மாநாட்டுக் கட்சி - காங்கிரஸ் - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  - பேந்தர்ஸ் கட்சி உள்ளிட்ட  கட்சிகள் இணைந்த “இந்தியா” கூட்டணி ஆட்சி யை கைப்பற்றும் என கருத்துக்கணிப்பு முடிகள் வெளியாகி வருவதால், பதற்றத் தில் உள்ள பாஜக, தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல்வ ருமான பரூக் அப்துல்லாவிற்கு  அமலா க்கத்துறை மூலம் நெருக்கடி கொடுக்கும் வேலையை துவங்கியுள்ளது.

பரூக் அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மாநில கிரிக்கெட் சங்கத்தில் நிதி  முறைகேடு செய்ததாக அமலாக்கத்து றை தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையை கடந்த மாதம் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. ஆனாலும், அதே வழக்கில் பரூக் அப்துல்லா மீது புதிய வழக்கு பதிவு செய்ய அனுமதி கோரி  ஸ்ரீநகர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மீண்டும் மனு தாக்கல் செய்துள்ளது. அதில் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில் சொத்து சேர்த்தல் மற்றும் சொத்தை மறைத்தல் ஆகிய 2 பிரிவு களின் கீழ் வழக்குப்பதிவு செய்ய அனு மதிக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ராஞ்சி
ஜார்க்கண்டில் 
ஜேஎம்எம் - காங்கிரஸ் எம்எல்ஏக்களை இழுக்க பாஜக குதிரை பேரம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார் க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்) - காங்கிரஸ் கட்சிகளின் கூட்ட ணி ஆட்சி நடைபெற்று வரும் நிலை யில், முதல்வராக ஜேஎம்எம் கட்சியின் மூத்த தலைவர் ஹேமந்த் சோரன் உள்ளார். 

இந்நிலையில், ஜார்க்கண்டில் ஜேஎம்எம், காங்கிரஸ்  எம்எல்ஏக்களை இழுக்க பாஜக குதிரை பேரம் நடத்தி  வருவதாக ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறுகையில், “2019இல் ஜேஎம் எம்-காங்கிரஸ் ஆட்சி அமைந்தது. அப் போது முதல் 5 ஆண்டுகளாக இந்த  ஆட்சி யைக் கவிழ்க்க பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது. பாஜக இப்போதும் எம்எல்ஏக்களை விலைபேசிக் கொண்டி ருக்கிறது. ஆனால் பாஜகவின்  இந்த குதிரை பேர முயற்சி ஒருபோதும் கை கொடுக்காது” என அவர் கூறியுள்ளார்.