india

img

2024க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவை

2024க்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை தொடங்கப்போவதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இந்தியாவில் தற்போது 4ஜி சேவை புழக்கத்தில் உள்ள நிலையில் அதிவேக 5ஜி சேவையை அறிமுகப்படுத்துவதில் நெட்வொர்க் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்நிலையில் 2024 ஆம் ஆண்டிற்குள் இந்தியா முழுவதும் 5ஜி சேவையை அறிமுகப்படுத்த உள்ளதாக ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது.  

இது 5ஜி நெட்வொர்க் மற்றும் குறைந்த லேட்டன்ஸி திறனை காட்சிப்படுத்தியுள்ளது. இந்த லோ லேட்டன்ஸி திறன்மூலம் அதிக அளவிலான டேட்டாவை மிக குறைந்த நேரத்தில் ஸ்ட்ரீம் செய்ய முடியும்.  

மேலும் 5ஜி சேவையின் மூலம் துல்லியமான ஹோலோகிராம்களை உருவாக்கி எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் அனுப்ப முடியும், இணைய சந்திப்பு, இணைய நிகழ்ச்சி, நேரலை செய்திகள் ஆகியவற்றில் இந்த ஹோலோகிராம் பெறும் மாற்றத்தை ஏற்படுத்தும் என ஏர்டெல் தெரிவித்துள்ளது.  

இன்னும் 2  மாதத்தில் 5ஜி ஸ்பெக்ட்ரம் ஏலம் நடைபெறவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. அதன்பின் இந்த வருட சுதந்திர தினத்தின்போது 5ஜி சேவை அறிமுகம் செய்யப்படும் என ஏர்டெல் நிறுவனம் அறிவித்துள்ளது.