முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி படிப்பில் சேர 4 ஆண்டுகால இளநிலை படிப்புகள் அறிமுகமாக உள்ளதாக யுஜிசி புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் உயர் கல்வித்துறையில் புதிய கல்விக்கொள்கை திட்டத்தின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில் முதுகலை படிக்காமல் நேரடியாக பிஎச்டி சேர 4 ஆண்டு இளநிலை படிப்புகளை யுஜிசி அறிமுகப்படுத்த முடிவு செய்துள்ளது.
இதில் ஏற்கனவே அமலில் உள்ள 3 ஆண்டுகால இளநிலை படிப்புகளுடன், விருப்பத்தேர்வாக 4 ஆண்டுகால முதுகலை படிப்பும் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த 4 ஆண்டுகால படிப்பை நேரடியாகவும், ஆன்லைன் வழியாகவும், தொலைதூரக்கல்வி வழியாகவும் விருப்பத்தின் பேரில் பயிலலாம்.
மேலும் 4 ஆண்டுகால படிப்பில் சேருவோர்கள் எப்போது விரும்பினாலும் பாதியில் படிப்பை நிறுத்திவிட்டு மீண்டும் எந்த உயர்கல்வி நிறுவனத்திலும் படிப்பை தொடரலாம் என யுஜிசி தெரிவித்துள்ளது.
இந்த மாற்றங்கள் 2022-2023 கல்வியாண்டிலிருந்து அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.