india

img

10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள்.... ஒரே முடிவெடுக்க வலியுறுத்தல்...

மும்பை:
கொரோனா  இரண்டாவது அலையின் தீவிரம் அதிகரித்து வருவதால், 10,12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு குறித்து நாடு முழுவதும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும் என்று மத்திய அரசை சிவசேனா கட்சி வலியுறுத்தியுள்ளது.

கொரேனாவால் நாள்தோறும்ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டமக்கள் தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். இதனால், 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகளை ரத்து செய்ய வேண்டும் அல்லது ஆன்லைனில் நடத்த வேண்டும் எனக் கோரி ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் கையொப்பமிட்டு மனுக்கள்மூலம் மத்திய அரசை வலியுறுத்தி யுள்ளனர்.

ஆனால் சிபிஎஸ்இ நிர்வாகம், “ மாணவர்கள் உரிய சமூக விலகலைக் கடைபிடித்து அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்யப்படும். தேர்வு மையங்கள் 50 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளது.கொரோனா காலத்தில் தேர்வுகளை எழுத மாணவர்களை கட்டாயப்படுத்தும் சிபிஎஸ்இ வாரியத்தை காங்கிரஸ்பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்திருந் தார்.இந்தநிலையில் மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியாலுக்கு சிவசேனா கட்சியின் செய்தி்த்தொடர்பாளர் அரவிந்த் சாவந்த் கடிதம் எழுதியுள்ளார். அதில், “ கொரோனா காலத்தில் எந்த மாநில அரசாவதுஒருதலைபட்சமாக 10, 12-ஆம்வகுப்புத் தேர்வுகளில் முடிவுஎடுத்தால், அது மாணவர் களின் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு களில் பின்னடைவை ஏற்படுத்தும்.எந்த மாநில அரசாவது ஒருதலைபட்சமாக முடிவு எடுப்பதைத் தடுக்கவும், தேசிய அளவில் கருத்தொற்றுமையை உருவாக்க பிரதமர் தலையிட வேண்டும், 10, 12 ஆம் வகுப்பு மாணவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல், மாணவர்களின் பாதுகாப்பு, வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு நாடுமுழுவதும் ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்.மகாரஷ்டிராவில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ, மாநில கல்வி வாரியம், ஐபி மற்றும் ஐஜிசிஎஸ்இ என பல்வேறு கல்வி வாரியங்கள் இயங்குகின்றன. ஆதலால், 10, 12-ஆம் வகுப்பு தேர்வுகள் குறித்துதெளிவான முடிவை, மத்திய கல்வித்துறை எடுத்து அறிவி்க்க வேண்டும்.ஏப்ரல்-மே மாதங்களில் தேர்வுதொடர்பாக ஏராளமான இளைஞர்கள், மாணவர்கள் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகத்துக்குச் செல்கிறார்கள். இந்த இளைஞர்களின் வயதுக்கு தடுப்பூசியும் போடமுடியாது, அதற்கான வழியும் மத்திய அரசு விதிமுறைகளில் இல்லை.

தேர்வு நேரத்தில் மாணவர்களுடன் பெற்றோர் செல்லும் போதுஅவர்களும், ஆசிரியர்களும், ஆசிரியர் பணியில் இல்லாதவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. பல மாணவர்களும், ஆசிரி யர்களும், தனிமைப்படுத்தப்பட்ட இடங்களில் இருந்து வருகிறார்கள். அவர்களுக்கென தனியாக வாகன வசதிகளும் செய்வதும் கடினம். இதைக் கருத்தில் கொண்டு ஒரே மாதிரியான முடிவை மத்திய அரசு எடுக்க வேண்டும்இவ்வாறு அந்தக் கடிதத்தில் தெரிவித்துள்ளார்.