india

img

முஸ்லிம்களின் குடியிருப்புகளை இடித்துத் தள்ளிய ம.பி. பாஜக அரசு.... ராமர் கோயில் நன்கொடை வசூல் என்ற பெயரில் இந்தூர் அருகே சந்தன்கெடி கிராமத்தில் வன்முறை.....

போபால்:
மத்தியப்பிரதேச மாநிலம் இந்தூர் அருகே சந்தன்கெடி கிராமத்தில் முஸ்லிம்களின் 13 குடியிருப்புகள், அம்மாநில பாஜக அரசால் இடித்துத் தள்ளப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.ஸ்ரீராம ஜென்மபூமி நிர்மாண் சமிதி என்ற இந்துத்துவா அமைப்புக் கும் தங்களுக்கும் இடையே ஏற்பட்டமோதலின் பின்னணியில், பழிவாங்கும் நடவடிக்கையாகவே பாஜக அரசு வீடுகளை இடித்துள்ளது என்று சிறுபான்மை முஸ்லிம் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ரூ. 1100 கோடி தேவை என்று கூறியுள்ள ராமஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அறக்கட்டளை, இதற்காக 12 லட்சம் குடும்பங்களைச் சந்தித்து, நிதி வசூல் செய்யப்படும் என்று அண் மையில் அறிவித்திருந்தது. இந்தப் பணியில் 4 லட்சம் சுயம்சேவக்குகள் ஈடுபடுவார்கள் என்றும் கூறியிருந்தது. அப்போதே இது நன்கொடை திரட்டுவதற்கான இயக்கம் போல தெரியவில்லை; ராமர் பெயரில் மீண் டும் கலவரத்தை ஏற்படுத்தி, 2024 தேர்தலிலும் மத்திய ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் திட்டம் இதன் பின்னால் உள்ளது என்று சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் குற்றம் சாட்டின. 

இந்நிலையில்தான், ராமர் கோயில்கட்டுமானப் பணிகளுக்கான நிதி வசூல் என்ற பெயரில், ஸ்ரீராம ஜென்மபூமி நிர்மாண் சமிதி என்ற அமைப்பு கடந்த டிசம்பர் 29 அன்று சந்தன்கெடி கிராமத்தில் ஊர்வலம் நடத்தியுள்ளது. அப்போது ஊர்வலத்தில் வந்தவர்கள்வேண்டுமென்றே சிறுபான்மையினரின் குடியிருப்பு பகுதியில் அவர் களுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பி வம்பிழுத்துள்ளனர். குறிப்பாக,நூற்றுக்கணக்கானோர் அங்குள்ள மசூதி முன்பு அனுமன் சலிசாவை முழங்கியுள்ளனர். சுமார் 70-க்கும்மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களிலும் ஆயுதங்களுடன் பயமுறுத்தும் வகையில் பெரும் சத்தத்துடன் வலம்வந்துள்ளனர். மசூதியின் மூன்று மினார்களை உடைக்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர். சந்தன்கெடி கிராமத்தில் முஸ்லிம்கள் அதிகம் வசித்தாலும், அருகிலுள்ள ஊர்களிலிருந்து ஆட்களை அழைத்துவந்து, இந்த வன்முறை நடத்தப்பட்டுள்ளது.

இது ஒருகட்டத்தில் இருதரப்புக்கும் இடையிலான மோதலாக மாறவே கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. கடைசியில், துப்பாக்கிச் சூடு நடத்தப் படும் அளவிற்கு நிலைமை மோசமாகி உள்ளது. பலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக இருதரப்பிலும் தற்போது 27 பேர் கைது செய்யப் பட்டுள்ளனர்.இந்தப் பின்னணியில் மோதல்நடைபெற்ற மறுநாளே, முஸ்லிம் களின் 13 வீடுகள் ஆக்கிரமிப்பு என்ற பெயரில் இடித்துத் தள்ளப்பட்டுள்ளன. இது பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை என்று பாதிக்கப்பட்ட சிறுபான்மை மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

ஆனால், இடிக்கப்பட்ட வீடுகள் அனைத்தும் மத்தியப்பிரதேச மாநிலஅரசுக்கு சொந்தமான இடத்தில் கட்டப்பட்டிருந்தன. தீயணைப்பு வாகனம் கூட செல்ல முடியாத நிலை அப்பகுதியில் இருந்தது. இதனால் ஆக்கிரமிப்பு கட்டடங்கள் அகற்றப் பட்டன; அத்துடன் முன்கூட்டியே நோட்டீஸ் வழங்கித்தான் வீடுகளை இடித்தோம் என்று பாஜக அரசு நிர்வாகம் கூறியுள்ளது.