மத்திய பிரதேசத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இரு பழங்குடியினரை அடித்துக் கொன்ற பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலம் சியோனி மாவட்டத்தில் மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த 15 முதல் 20 பேர் கொண்ட குழு பாதிக்கப்பட்ட பழங்குடியினர் வீட்டிற்குச் சென்று அவர்களைத் தாக்கியுள்ளனர். இந்த தாக்குதலில் இரு பழங்குடியினர் உயிரிழந்தனர். ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மாட்டிறைச்சி வைத்திருந்ததாகக் கூறி இரண்டு பழங்குடிகளைக் கொலை செய்த குற்றச்சாட்டில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்த ஷேர் சிங் ரத்தோர் (28), அஜய் சாஹு (27), வேதாந்த் சௌஹான் (18), தீபக் அவதியா (38), பசந்த் ரகுவன்ஷி (32), ரகுநந்தன் ரகுவன்ஷி (20) உள்ளிட்ட ஒன்பது பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
மேலும், அன்ஷுல் சௌராசியா (22), சிவராஜ் ரகுவன்ஷி (23), ரின்கு பால் (30) ஆகிய மூன்று பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவத்துடன் தொடர்புடைய பிறரைத் தேடி வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.