india

img

‘மோடியே ராஜினாமா செய்’ ஹேஷ்டேக்.... முடக்கிய முகநூல் பதிவுகள் மீட்டமைப்பு...

கொச்சி:
#மோடியே ராஜினாமா செய் (#ResignModi) என்ற ஹேஷ்டேக் கொண்ட இடுகைகள் தடுக்கப்பட்ட சற்று நேரத்தில் உலக அளவில் எழுந்தகடும் விமர்சனத்தால் இடுகைகளை மீட்டமைத்தது முகநூல் நிறுவனம்.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்கப்படும்  என்று முகநூல் அதிகாரிகள் தெரிவித்தனர்.இந்தியாவில் கோவிட் தடுப்பூசியின் விலையை கட்டுப்படுத்தாத தற்காகவும், ஆக்சிஜன் பற்றாக்குறையால் நோயாளிகளைக் கொன்றதற்காகவும் மத்திய அரசுக்கு எதிராகசமூக ஊடகங்களில் கடும் விமர்சனம்எழுந்தது. நாடு எதிர்கொள்ளும் நெருக்கடியை சமாளிக்க முன்வராமல் கார்ப்பரேட் நலன்களுக்காக செயல்படும் மோடி அரசு ராஜினாமா செய்ய வேண்டும் என்று சமூக ஊடகங்களில் கோரிக்கை எழுந்துள்ளது. இதையொட்டி, #ResignModi என்ற ஹேஷ்டேக் ஒரு ட்ரெண்டாக மாறியது.ஆனால் சற்று நேரத்தில் ஹேஷ்டேக் கொண்ட பதிவுகள் தடுக்கப்பட்டன. இதுபோன்ற பதிவுகள் தங்கள் சமூகத் தரத்திற்கு எதிரானவை என முகநூல் விளக்கமளித்தது. பதிவுகள் மீதான முகநூலின் தடைசர்வதேச அளவில் விவாதிக்கப்பட் டது. இதைத் தொடர்ந்து, சற்றுநேரத்தில் ஹேஷ்டேக் மீட்டமைக்கப் பட்டது. டுவீட்டரிலும் இந்த ஹேஸ்டேக் ட்ரெண்டாகியுள்ளது.