india

img

நாடு முழுவதும் பாலின பாகுபாடு நீடிக்கையில் கேரளத்தில் அதிகமான பெண்களுக்கு தடுப்பூசி....

திருவனந்தபுரம்:
கோவிட் தடுப்பூசி விநியோகத்தில் உலகிலும் இந்தியாவிலும் பாலின சமத்துவமின்மை நீடிக்கும் அதே வேளையில் கேரளாவில் பெண்கள்முன்னிலையில் உள்ளனர். நாட்டில் தடுப்பூசியின்முதல் டோஸ் பெற்றுக் கொண்டவர்களில் பெண்களை விட ஆண்கள் 7.99 சதவீதம் அதிகம். ஆனால்கேரளாவில் கோவிட் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களில் ஆண்களைவிட பெண்கள் 3.78 சதவிகிதம் அதிகம்.

உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி,உலகளவில் 215 கோடி டோஸ் விநியோகிக்கப்பட்டது. ஆனால் அவற்றை பெறுவதில் பெண்கள்பின்தங்கியுள்ளனர். விநியோகத்தில் பாலின சமத்துவமின்மையை நாடுகள் கவனிக்க வேண்டும் என்று ஐ.நா. கேட்டுக்கொண்டுள்ளது. உலகின் சுகாதார ஊழியர்களில் எழுபது சதவிகிதம் பெண்கள், ஆனால், 25 சதவிகிதம் பேர்மட்டுமே தலைமை தாங்கும் இடத்தில்உள்ளனர்.

60 சதவிகிதம் பெண்களுக்கு இணையவசதி
தேசிய குடும்ப சுகாதார கணக்கெடுப்பின்படி, கேரளத்தில் 60.10 சதவிகிதம் பெண்களுக்கு இணைய வசதி உள்ளது. பீகார், மேற்கு வங்கம், கர்நாடகா, அசாம், ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இது 30 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. கேரளாவில் பெண்கள் சமூக, அரசியல் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துகின்றனர். கோவிட் தகவல்களை ஆண்களைப் போலவே பெண்கள் புரிந்துகொள்கிறார்கள். கல்வி மற்றும் சுகாதார விழிப்புணர்வும் உள்ளது. தடுப்பூசி போடுவதன் அவசியத்தை அவர்களால் புரிந்து கொள்ள முடிந்தது.